ஒரு கேப்டனாக தோனி, கோலியை மிஞ்சிய ரோஹித்!! இனி எந்த கேப்டனாலும் முறியடிக்க முடியாத மற்றொரு சாதனை

By karthikeyan VFirst Published Nov 12, 2018, 10:24 AM IST
Highlights

ஒரு கேப்டனாக தோனி, விராட் கோலி எல்லாம் செய்யாத சம்பவத்தை செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார் ரோஹித் சர்மா. 
 

ஒரு கேப்டனாக தோனி, விராட் கோலி எல்லாம் செய்யாத சம்பவத்தை செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார் ரோஹித் சர்மா. 

விராட் கோலி தலைசிறந்த வீரராக இருந்தாலும் அவரது கேப்டன்சியின் மீது பல விமர்சனங்கள் உள்ளன. கள வியூகம், பவுலர்களை பயன்படுத்தும் விதம், வீரர்களுடனான அணுகுமுறை ஆகியவை மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

அதேநேரத்தில் ரோஹித் சர்மா கேப்டனாகும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவரது கேப்டன்சி திறமையை நிரூபித்துவருகிறார். சிறப்பான கேப்டன்சியால் வெற்றிகளை குவித்துவருகிறார். அவரது கேப்டன்சியில் நிதாஹஸ் டிராபி, ஆசிய கோப்பை ஆகிய தொடர்களை இந்திய அணி வென்றது. ரோஹித் சர்மா வெற்றிகளை குவிக்கும்போதெல்லாம் அவரை நிரந்தர கேப்டனாக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தவண்ணம் தான் உள்ளன.

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து 3-0 என டி20 தொடரை வென்றதன் மூலம் ரோஹித் சர்மா புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார். தோனி, விராட் கோலி ஆகிய இருவரும் கேப்டனாக செய்யாத ஒரு சம்பவத்தை பார்ட் டைம் கேப்டனான ரோஹித் சர்மா செய்துள்ளார். 

ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி, டி20 தொடரில் எதிரணியை ஒயிட்வாஷ் செய்வது இது இரண்டாவது முறையாகும். டி20 தொடரில் எதிரணியை இரண்டுமுறை ஒயிட்வாஷ் செய்த இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மட்டும்தான். இந்த பட்டியலில் 5 முறை எதிரணிகளை ஒயிட்வாஷ் செய்த பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது முதலிடத்திலும் 3 முறை எதிரணியை ஒயிட்வாஷ் செய்த ஆஃப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் ஆஃப்கான் இரண்டாமிடத்திலும் உள்ளனர். 

அதேபோல, ரோஹித் சர்மாவின் தலைமையில் 12 டி20 போட்டிகளில் ஆடியுள்ள இந்திய அணி 11 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் ஒரே ஒரு டி20யில் மட்டுமே இந்திய அணி தோற்றுள்ளது. இதன்மூலம் ஒரு கேப்டனாக முதல் 12 டி20 போட்டிகளில் அதிகமான வெற்றிகளை பதிவு செய்த கேப்டன் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். பாகிஸ்தானின் ஷோயப் மாலிக் மற்றும் சர்ஃப்ராஸ் அகமது, ஆஃப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் ஆகியோர் தலா 10 வெற்றிகளை பதிவு செய்துள்ளனர். 11 வெற்றிகளை பதிவு செய்துள்ள ரோஹித் சர்மா, இவர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார். இனிமேல் ஒருவர் 12லும் வென்றால் மட்டுமே ரோஹித்தை முந்தமுடியும். ஆனால் அது நடக்குமா என்பது சந்தேகம்தான். 

ரோஹித்தின் வெற்றிப்பயணம் இன்னும் முடிந்துவிடவில்லை. இனியும் கேப்டனாக கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் சிறப்பாக பயன்படுத்தி வெற்றிப்பயணத்தை தொடருவார் என நம்புவோம். 
 

click me!