தெற்காசிய ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டிகளில் 10 தங்க பதக்கங்களை வென்று இந்தியா அசத்தல்...

First Published Apr 23, 2018, 10:25 AM IST
Highlights
India wins 10 gold medals in South Asian Judo Championships


தெற்காசிய ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டிகளில் 10 தங்க பதக்கங்களை வென்று இந்தியா அசத்தியுள்ளது. மொத்தம் 13 பதக்கங்களுடன் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. 

தெற்காசிய ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 21-ஆம் தேதி நேபாள நாட்டில் தொடங்கின.  இதில், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், பூடான் மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகள் விளையாடின.

இதில், இந்திய வீரர், வீராங்கனைகள் மொத்தம் 10 தங்க பதக்கங்களை கைப்பற்றியுள்ளனர்.  

மகளிர் ஒற்றையர் பிரிவில் 7 தங்கம் மற்றும் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 3 தங்கம் என்று மொத்தம் 10 தங்க பதக்கங்களை இந்தியா வென்று அசத்தியுள்ளது. மேலும், மூன்று 3 வெண்கல பதக்கங்களையும் வென்று மொத்தம் 13 பதக்கங்களுடன் இந்தியா முன்னிலையில் இருக்கிறது. 

நேபாளம் 2 தங்கம், 6 வெள்ளி மற்றும் 13 வெண்கல பதக்கங்களுடன் 21 பதக்கங்களை கைப்பற்றி இரண்டாவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 2 தங்கம், 3 வெள்ளி மற்றும் 3 வெண்கல பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இலங்கை 3 தங்கம் மற்றும் 5 வெண்கல பதக்கங்களும், அதனை தொடர்ந்து வங்காளதேசம் 2 வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கங்களையும் கைப்பற்றி உள்ளன.  பூடானுக்கு ஒரு வெண்கல பதக்கமே கிடைத்துள்ளது என்பது கூடுதல் தகவல். 

tags
click me!