பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டியிலும் இந்தியாவுக்கு தான் வெற்றி…

 
Published : Feb 04, 2017, 01:44 PM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டியிலும் இந்தியாவுக்கு தான் வெற்றி…

சுருக்கம்

மும்பை,

பத்து அணிகள் பங்கேற்றுள்ள பார்வையற்றோருக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.

இதில் மும்பையில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் சந்தித்தன.

முதலில் ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ஒட்டங்கள் குவித்தது.

அதிகபட்சமாக டேவிட் லான்ட்ரே ஆட்டம் இழக்காமல் 42 ஓட்டங்கள் எடுத்தார்.

பின்னர் ஆடிய இந்திய அணி 13.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 158 ஓட்டங்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

இந்திய அணியில் துர்கா ராவ் 19 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார்.

ஜாபர் இக்பால் 54 ஓட்டங்களுடனும், முகமது பர்ஹான் 59 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

ஐந்தாவது ஆட்டத்தில் ஆடிய இந்திய அணி பெற்ற 4-வது வெற்றி இதுவாகும்.

பாகிஸ்தானிடம் மட்டும் தோல்வி கண்டு இருந்தது.

அடுத்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி, இன்று இலங்கையை சந்திக்கிறது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

விஜய் ஹசாரே டிராபியில் கோலி மிரட்டல் சதம்.. 16000 ரன்களை கடந்து புதிய சாதனை
'பும்ரா, ரிஷப் பண்ட் என்னிடம் மன்னிப்பு கேட்டனர்'.. உருவக் கேலி குறித்து மனம் திறந்த பவுமா..!