
பத்தாவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க போவதில்லை என்று இங்கிலாந்து வீரரான கெவின் பீட்டர்சன் தெரிவித்தார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், கடந்த சில மாதங்களாக பல்வேறு லீக் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடி வந்ததன் காரணமாக ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதில்லை என முடிவு செய்துள்ளார் பீட்டர்சன்.
இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
“இந்த முறை ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கவில்லை. கடந்த சில மாதங்களாக பிக் பாஷ் லீக் உள்ளிட்ட போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தேன். அதற்காக தொடர்ச்சியாக பயணம் மேற்கொண்டிருந்தேன். அதனால் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவுள்ள ஐபில் போட்டியில் பங்கேற்கப் போவதில்லை” எனத் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பிக் பாஷ் லீக் டி20 போட்டியில் 8 ஆட்டங்களில் பங்கேற்ற பீட்டர்சன், 268 ரன்கள் குவித்தார். கடந்த ஐபிஎல் சீசனில் புணே அணியில் இடம்பெற்ற பீட்டர்சன் 4 ஆட்டங்களில் மட்டுமே விளையாடிய நிலையில் காயம் காரணமாக விலகினார். அதைத் தொடர்ந்து அவரை புணே அணி விடுவித்தது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.