
நியூஸிலாந்துக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் முதல் நாளில் இந்திய வீரர்கள் ராம்குமார், யூகி பாம்ப்ரி ஆகியோர் வெற்றி கண்டதன் மூலம் முதல் நாளில் இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியா-நியூஸிலாந்து அணிகளிடையிலான ஆசிய-ஓசியானியா குரூப் 1 டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி புணேவில் நேற்றுத் தொடங்கியது.
மூன்று நாள்கள் நடைபெறும் இந்தப் போட்டியின் முதல் நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் யூகி பாம்ப்ரியும், நியூஸிலாந்தின் ஃபின் டியர்னியும் மோதினர். இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய யூகி பாம்ப்ரி 6-4, 6-4, 6-3 என்ற நேர் செட்களில் ஃபின் டியர்னியை தோற்கடித்தார்.
இதையடுத்து நடைபெற்ற 2-ஆவது ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் 6-3, 6-4, 6-3 என்ற நேர் செட்களில் நியூஸிலாந்தின் ஜோஸ் ஸ்டாட்ஹாமை தோற்கடித்தார்.
இந்த இருவரின் வெற்றியால், இந்தியா முதல் நாளில் நடைப்பெற்ற ஆட்டத்திலேயே முன்னிலையைப் பெற்றுள்ளது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.