
டேவிஸ் கோப்பை போட்டி குறித்துப் பேசும்போது, “இந்திய அணியின் தூண்களில் சாகேத்தும் ஒருவர்” என்று பயஸ் தெரிவித்தார்.
டேவிஸ் கோப்பை போட்டி குறித்து பயஸ் பேசியது, "எனது நாட்டுக்காக களமிறங்கும் இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்.
சாகேத் மைனேனி விளையாட முடியாமல் போனது வருத்தமாக இருக்கிறது. நாட்டுக்காக விளையாடுகிற போட்டிகளின்போது காயமடைவதை எந்த வீரரும் விரும்பமாட்டார்.
சாகேத் மைனேனி தலைசிறந்த வீரர். இதற்கு முன்னர் ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டத்தில் நானும், சாகேத்தும் இணைந்து விளையாடினோம்.
அவருடன் களமிறங்கியபோது ஆட்டத்தை இரசித்து விளையாடினேன்.
என்னை சந்தித்த சாகேத், காயம் காரணமாக விளையாட முடியாது. என்னை மன்னித்துவிடுங்கள் என்றார். அவர் விரைவாக குணமடைய நம்முடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோம். இந்திய அணியின் தூண்களில் அவரும் ஒருவர்' என்றுத் தெரிவித்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.