கோலிக்கு முதலிடம்; இந்தியாவுக்கு இரண்டாவது இடம்.

Asianet News Tamil  
Published : Feb 03, 2017, 11:56 AM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
கோலிக்கு முதலிடம்; இந்தியாவுக்கு இரண்டாவது இடம்.

சுருக்கம்

ஐசிசி டி20 கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலிடத்திலும், அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது.

ஐசிசி டி20 கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

இரண்டாவது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவின் ஆரோன் ஃபிஞ்சைவிட 28 ரேங்கிங் புள்ளிகளை கூடுதலாக பெற்றுள்ளார் கோலி.

மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் மற்றொரு அதிரடி பேட்ஸ்மேனான கிளன் மேக்ஸ்வெல் உள்ளார்.

பெளலர்கள் தரவரிசையில் தென் ஆப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர் முதலிடத்திலும், இந்தியாவின் ஜஸ்பிரித் பூம்ரா 2-ஆவது இடத்திலும், மேற்கிந்தியத் தீவுகளின் சாமுவேல் பத்ரீ 3-ஆவது இடத்திலும் உள்ளனர்.

இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திர சாஹல், இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் 25 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் 92 இடங்கள் முன்னேறி 86-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

அணிகள் தரவரிசையைப் பொறுத்தவரையில் நியூஸிலாந்து அணி முதலிடத்தில் உள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, ஓர் இடம் முன்னேறி, 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணி 3-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

yuzvendra chahal: விமானத்தில் சாஹல் செய்த விபரீதம்: சிக்கிய வீடியோ... முடிவுக்கு வரும் கிரிக்கெட் வாழ்க்கை?
IPL பைனல் பெங்களூருவில் நடக்காது.... பிளே ஆஃப் அட்டவணையில் பிசிசிஐ வைத்த ட்விஸ்ட்