கடைசி டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை இன்று மோதல்...

 
Published : Dec 02, 2017, 10:44 AM ISTUpdated : Sep 19, 2018, 01:31 AM IST
கடைசி டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை இன்று மோதல்...

சுருக்கம்

India vs Sri Lanka in last Test match

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் ஆட்டம் டெல்லியில் இன்றுத் தொடங்குகிறது.

மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகளில் பங்கேற்பதற்காக இலங்கை அணி இந்தியா வந்துள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் ஆட்டங்கள் முடிவடைந்துவிட்டது.

இந்த நிலையில், இந்தத் தொடரின் மூன்றாவது டெஸ்ட் ஆட்டம் இன்று டெல்லி ஃபெரேஸ் ஷா கோட்லா மைதானத்தில் தொடங்குகிறது.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆட்டம் டிரா ஆன நிலையில், மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில், 3-வது டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற வேண்டும் என்று இந்திய வீரர்கள் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம், இலங்கை அணியும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்று முனைப்பு காட்டி வருகிறது.
இந்திய அணியின் விவரம்

விராட் கோலி (கேப்டன்),  முரளி விஜய், ராகுல், தவன், புஜாரா, ரஹானே, ரித்திமான் சாஹா  (விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா, அஸ்வின், ஜடேஜா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது சமி, விஜய் சங்கர், குல்தீப் யாதவ்.

இலங்கை அணியின் விவரம்:

தினேஷ் சண்டிமல் (கேப்டன்), திமுத் கருணாரத்னே, சதீரா சமரவிக்ரமா, லாஹிரு திரிமன்னே, நிரோஷன் டிக்வெல்லா (விக்கெட் கீப்பர்), ஏஞ்செலோ மேத்யூஸ், தில்ரூவன் பெரேரா, ஜெஃப்ரி வன்டர்சே, ரோஷன் சில்வா, டாசன் சனஹா, லக்ஷன் சன்டகன், தனஞ்செய டி சில்வா, லாஹிரு காமேஜ், சுரங்கா லக்மல்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ரோகித், விராட் கோலி ரசிகர்களே ரெடியா? அடுத்த மேட்ச் எப்போது? லைவ் உண்டா?
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி பிளேயிங் லெவன்.. சஞ்சு சாஞ்சன் இடத்துக்கு சிக்கல்.. இதுதான் காரணம்!