
உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில், ஜெர்மனியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய ஆடவர் அணி காலிறுதிக்கு முன்னேறியது.
பிரான்ஸின் மார்சைல் நகரில் உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் ஜெர்மனியை போட்டித் தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் இந்தியா எதிர்கொண்டது.
இந்தியாவின் விக்ரம் சிங், 11-8, 11-1, 11-8 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் ரூடியை வீழ்த்தினார். இதையடுத்து, இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
மற்றொரு ஆட்டத்தில், ஜெர்மனியின் சிமன் ரூஸ்னரிடம் 9-11, 11-4, 5-11, 11-6, 3-11 என்ற செட் கணக்கில் இந்தியாவின் சௌரவ் கோஷல் தோல்வியைச் சந்தித்தார். இதனால், இந்தியா - ஜெர்மனி 1-1 என்ற கணக்கில் சமநிலை வகித்தது.
இந்த நிலையில், இந்தியாவின் மகேஷ் மங்காவன்கர் (23), 11-6, 11-7, 11-4 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் வாலண்டைன் ராப்பை வீழ்த்தியதையடுத்து 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு இந்திய ஆடவர் அணி முன்னேறியது.
ஸ்குவாஷ் உலகத் தரவரிசை புதிய பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில், ஆடவர் பிரிவில் சௌரவ் கோஷல் ஐந்து இடங்கள் முன்னேறி 16-வது இடத்துக்கு வந்தார்.
இதேபோல், ஹரீந்தர் பால் சந்து 52-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்
மகளிர் பிரிவில், ஜோஸ்னா சின்னப்பா 15-வது இடத்திலும், தீபிகா பல்லிகல் 20-வது இடத்திலும் உள்ளனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.