
இளையோர் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச்சுற்று ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஷூட் ஔட் முறையில் மலேசியாவை வீழ்த்தியது.
இளையோர் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச்சுற்று ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில் முதலில் மலேசியா தனது கோல் கணக்கை தொடங்கியது.
ஆட்டத்தின் 11-வது நிமிடத்தில் அந்த அணியின் முகமது அனுவார் கோலடிக்க, அடுத்த நிமிடத்திலேயே இந்தியாவின் ராகுல் குமார் ராஜ்பார் அதற்கு பதிலடி கொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து, 14-வது நிமிடத்தில் இந்திய கேப்டன் விவேக் சாகர் பிரசாத் தனது பங்கிற்கு ஒரு கோல் அடிக்க, இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது. ஆனால், மலேசியாவின் முகமது மோஹராம் அடுத்த நிமிடத்திலேயே கோலடித்து ஆட்டத்தை சமன் செய்தார்.
இந்த நிலையில், 18-வது நிமிடத்தில் விவேக் சாகர் பிரசாத், 20-வது நிமிடத்தில் ராகுல் குமார் ஆகியோர் மீண்டும் கோலடிக்க, இந்தியா 4-2 என முன்னிலை பெற்றது. எனினும், அணியின் தடுப்பாட்டத்தில் ஏற்பட்ட தடுமாற்றத்தை சாதகமாக்கிய மலேசியா, 26 மற்றும் 30-வது நிமிடங்களில் கோலடித்து ஆட்டத்தை 4-4 சமன் செய்தது.
பின்னர் வெற்றியாளரை தீர்மானிக்க நடைபெற்ற ஷூட் அவுட் முறையில், ரவிச்சந்திரா மொய்ராங்தெம், ராகுல் குமார் ஆகியோர் இந்தியாவுக்காக கோலடிக்க, மலேசியா ஒரேயொரு கோல் மட்டும் அடித்ததால் இறுதியில் இந்தியா வெற்றி பெற்றது.
இதையடுத்து, ஆர்ஜென்டீனாவில் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள இளையோர் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.