சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியா 3 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலம் வென்று அசத்தல்...

 
Published : Apr 30, 2018, 10:54 AM ISTUpdated : Sep 19, 2018, 02:18 AM IST
சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியா 3 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலம் வென்று அசத்தல்...

சுருக்கம்

India gold 5 silver and 5 bronze medals in international boxing match

சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியா மூன்று தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலம் வென்று அசத்தியுள்ளது.
 
சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் செர்பியாவில் நடைபெற்றது. இதன் ஆடவருக்கான 91 கிலோ எடைப் பிரிவு இறுதிச்சுற்றில் சுமித் சங்வான் - ஈகுவடாரின் கேசிலோ டோரெஸ் 5-0 என்ற கணக்கில் வீழ்த்தினார். 

அதேபோன்றும், 49 கிலோ எடைப் பிரிவில் ஹிமான்ஷு சர்மா - அல்ஜீரியாவின் முகமது டெளவாரெக்கை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி முதலிடம் பிடித்தார்.
 
ஆடவருக்கான இதர எடைப் பிரிவுகளில் லால்தின்மாவியா 52 கிலோ எடைப் பிரிவில், வரிந்தர் சிங் 56 கிலோ எடைப் பிரிவில், பவன் குமார் 69 கிலோ எடைப் பிரிவில் இறுதிச்சுற்றில் தோற்று வெள்ளிப் பதக்கம் வென்றனர். 

அதேபோன்று, 91 கிலோவுக்கு கூடுதலான எடைப் பிரிவில் நரேந்தரும், 48 கிலோ பிரிவில் ராஜேஷ் நர்வாலும் வெண்கலப் பதக்கம் தட்டிச் சென்றனர்.

இதனிடையே, மகளிருக்கான 51 கிலோ பிரிவு இறுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை நிகத் ஜரீன் -  கிரீஸின் அய்கெடெரினியை தோற்கடித்து தங்கம் வென்றார்.

இதர இந்திய வீராங்கனைகளில், ஜமுனா போரோ 54 கிலோ எடைப் பிரிவில், ரால்தே லால்ஃபகாமாவி 81+ கிலோ எடைப் பிரிவில் இறுதிச்சுற்றில் வீழ்ந்து வெள்ளியை கைப்பற்றினர். 

பிரியங்கா தாகுர் 60 கிலோ எடைப் பிரிவில், ருமி கோகோய் 75 கிலோ எடைப் பிரிவில், நிர்மலா ராவத் 81 கிலோ எடைப் பிரிவில் ஆகியோர் வெண்கலம் வென்றனர்.
 
ஆக மொத்தம், நேற்று நிறைவடைந்த பெல்கிரேட் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியா 3 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களை வென்றது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

T20 World Cup: இந்திய அணியின் துணை கேப்டனை தூக்கி எறிந்தது ஏன்..? ரகசியம் உடைத்த தேர்வுக்குழு
T20 உலகக்கோப்பை 2026: இந்திய அணி அறிவிப்பு.. சஞ்சு இன், கில் அவுட்.. BCCI அதிரடி