CWG 2022: நீச்சலில் ஸ்ரீஹரி நடராஜ் அரையிறுதிக்கு தகுதி! பாக்ஸிங்கில் பாக்., வீரரை வீழ்த்தி சிவா தாப்பா வெற்றி

Published : Jul 29, 2022, 09:06 PM IST
CWG 2022: நீச்சலில் ஸ்ரீஹரி நடராஜ் அரையிறுதிக்கு தகுதி! பாக்ஸிங்கில் பாக்., வீரரை வீழ்த்தி சிவா தாப்பா வெற்றி

சுருக்கம்

காமன்வெல்த் போட்டிகளில் இந்திய வீரர்கள் அசத்திவருகின்றனர். முதல் நாளிலேயே நீச்சல், பாக்ஸிங், டேபிள் டென்னிஸ் ஆகிய போட்டிகளில் வெற்றிகளை குவித்துள்ளனர்.  

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காமில் இன்று தொடங்கி நடந்துவருகிறது. இன்றைய முதல் நாள் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் அசத்தலாக விளையாடினர்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணியிடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

டேபில் டென்னிஸ் போட்டியில் இந்திய மகளிர் அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்திய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

\63.5 கிலோ எடைப்பிரிவு பாக்ஸிங்கில் பாகிஸ்தான் வீரர் சுலேமான் பலோச்சை எதிர்கொண்ட இந்திய வீரர் சிவா தாப்பா தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக விளையாடி சுலேமானை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற்றார்.

ஆடவர் 100மீ பேக் ஸ்ட்ரோக் நீச்சல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த நீச்சல் வீரர் ஸ்ரீஹரி நடராஜ், 54.68 வினாடிகளில் 100மீ தூரத்தை கடந்து 3ம் இடத்தை பிடித்தார். இதன்மூலம் 100மீ பேக் ஸ்ட்ரோக் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறினார் ஸ்ரீஹரி நடராஜ்.
 -
ஆண்கள் 100 மீட்டர் பேக்-ஸ்ட்ரோக் பிரிவு நீச்சல் போட்டியில், அவர் 54.68 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து மூன்றாம் இடம்பிடித்தார். இதன்மூலம், அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

350 ஹை-டெக் AI கேமரா.. பெங்களூரு மைதானத்தில் ரோபோ கண்காணிப்பு.. ஆர்சிபி ரசிகர்கள் குஷி!
கிரிக்கெட்டில் 'பேஸ்பால்' விதி: பேட்ஸ்மேன்களுக்கு இனி ஜாக்பாட்!