
இந்தியா ஓபன் பேட்மிண்டன் இன்று(ஜனவரி 17) தொடங்கியது. வரும் 22ம் தேதி வரை இந்த பேட்மிண்டன் தொடர் நடக்கிறது. இன்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து தாய்லாந்து வீராங்கனை சுபநிடா கேடதாங்கை எதிர்கொண்டார்.
இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய பி.வி.சிந்து 12-21 மற்றும் 20-22 என்ற செட் கணக்கில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறினார். இந்த போட்டியில் வெற்றிக்காக எவ்வளவோ கடுமையாக பி.வி.சிந்து போராடியும் பி.வி.சிந்துவால் முடியவில்லை.
IND vs NZ: இஷான் கிஷனுக்கு புதிய பேட்டிங் ஆர்டர்.. உறுதிப்படுத்திய கேப்டன் ரோஹித் சர்மா
ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு 2 பதக்கங்களை வென்று கொடுத்துள்ள பி.வி.சிந்து, இந்திய ஓபன் பேட்மிண்டனில் முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியும் சோகமும் அடைய செய்துள்ளது.
டென்மார்க் வீராங்கனை மியாவை எதிர்கொண்ட இந்தியாவின் சீனியர் வீராங்கனை சாய்னா நேவால், அபாரமாக விளையாடி 21-17, 12-21 மற்றும் 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.