Hockey World Cup 2023: ஜப்பானை வீழ்த்தி கொரியா வெற்றி.. ஜெர்மனி-பெல்ஜியம் போட்டி டிரா! புள்ளி பட்டியல் அப்டேட்

By karthikeyan VFirst Published Jan 17, 2023, 9:35 PM IST
Highlights

ஹாக்கி உலக கோப்பையில் இன்று நடந்த போட்டியில் ஜப்பானை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கொரியா வெற்றி பெற்றது. ஜெர்மனி - பெல்ஜியம் அணிகளுக்கு இடையேயான போட்டி டிராவில் முடிந்தது.
 

ஹாக்கி உலக கோப்பை தொடர் இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. பிரிவு டி-யில் இடம்பெற்றுள்ள இந்திய அணி முதல் போட்டியில் ஸ்பெய்னை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தாலும், இங்கிலாந்துக்கு எதிரான 2வது போட்டியில் இந்திய அணியால் வெற்றி பெற முடியவில்லை. இந்தியா - இங்கிலாந்து இடையேயான போட்டி டிராவில் முடிந்தது.

இன்று 2 போட்டிகள் நடந்தன. முதல் போட்டியில் கொரியா - ஜப்பான் அணிகள் மோதின. இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய கொரியா அணி 2 கோல்கள் அடிக்க, ஜப்பான் அணியால் ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது. இதையடுத்து 2-1 என்ற கோல் கணக்கில் கொரியா அணி வெற்றி பெற்றது.

IND vs NZ: இஷான் கிஷனுக்கு புதிய பேட்டிங் ஆர்டர்.. உறுதிப்படுத்திய கேப்டன் ரோஹித் சர்மா

அடுத்த போட்டியில் ஜெர்மனியும் பெல்ஜியமும் மோதின. இந்த போட்டியில் இரு அணிகளுமே வெற்றிக்காக கடுமையாக போராடின. இரு அணிகளும் அபாரமாக ஆடி, தலா 2 கோல்களை அடிக்க, ஆட்டம் டிராவில் முடிந்தது. இரு அணிகளாலும் கூடுதலாக ஒரு கோல் அடிக்க முடியவில்லை.

ஹாக்கி உலக கோப்பை புள்ளி பட்டியலில் பிரிவு ஏ-வில் ஆஸ்திரேலியா மற்றும் அர்ஜெண்டினா அணிகள் முதலிரண்டு இடங்களில் உள்ளன. பிரிவு பி-யில் பெல்ஜியம் மற்றும் ஜெர்மனி அணிகள் முதலிரண்டு இடங்களில் உள்ளன. ஆடிய 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவிய ஜப்பான் அணி கடைசி இடத்தில் உள்ளது.

பிரிவு சி-யில் ஆடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி முதலிடத்திலும், நியூசிலாந்து அணி 2ம் இடத்திலும் உள்ளன. மலேசியா அணி 3ம் இடத்தில் உள்ளது. நியூசிலாந்து மற்றும் மலேசியா அணிகள் ஆடிய 2 போட்டிகளில் தலா ஒரு வெற்றியை பெற்றதால் இரு அணிகளுக்குமே அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்புள்ளது.

Ranji Trophy: மற்றுமொரு அபாரமான சதம்.. இந்திய அணி நிர்வாகத்திற்கு நெருக்கடி கொடுக்கும் சர்ஃபராஸ் கான்

பிரிவு டி-யில் இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகள் முதலிரண்டு இடங்களில் உள்ளன. ஸ்பெய்ன் அணியும் ஆடிய 2 போட்டிகளில் ஒரு வெற்றியை பெற்றது. ஆனால் இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகள் ஒரு போட்டியில் ஜெயித்து, மற்றொரு போட்டி டிராவானதால் முதலிரண்டு இடங்களில் உள்ளன. ஒரு போட்டியில் ஜெயித்த ஸ்பெய்ன், அடுத்த போட்டியில் தோற்றதால் புள்ளி பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளது. எனவே கடைசி போட்டியின் முடிவை பொறுத்து ஸ்பெய்ன் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறவும் வாய்ப்புள்ளது.
 

click me!