Hockey: தென் கொரியாவை எதிர்கொள்ளும் இந்தியா: நம்பர் 1 இடத்தில் நீடிக்குமா?

By Rsiva kumar  |  First Published Aug 7, 2023, 4:21 PM IST

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இன்று நடக்கும் போட்டியில் இந்தியா மற்றும் கொரியா அணிகள் மோதுகின்றன.


கடந்த 3 ஆம் தேதி முதல் 7ஆவது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடந்து வருகிறது. வரும் 12 ஆம் தேதி வரையில் நடைபெறும் இந்த தொடரில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், தென் கொரியா, மலேசியா, ஜப்பான் ஆகிய 6 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா 3 முறை ஆண்களுக்கான ஆசிய ஹாக்கி டிராபியை கைப்பற்றியுள்ளன. தென் கொரியா அணி ஒரு முறை டிராபியை கைப்பற்றி உள்ளது.

யாரை கழற்றிவிட்டு, யார சேர்த்திருக்காங்க தெரியுமா? உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

Tap to resize

Latest Videos

இந்த நிலையில், இன்று 3 போட்டிகள் நடக்கிறது. 4 மணிக்கு தொடங்கும் போட்டியில் ஜப்பான் மற்றும் மலேசியா அணிகள் மோதுகின்றன. இதுவரையில் நடந்த 3 போட்டிகளில் ஜப்பான் 3 போட்டியிலும் தோல்வி அடைந்துள்ளது. மலேசியா 3 போட்டிகளில் விளையாடி 2ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது.

கிடைத்த வாய்ப்பையும் கோட்டைவிடும் சஞ்சு சாம்சன்: உலகக் கோப்பை வாய்ப்பு அம்பேல்?

இரவு 6.15 மணிக்கு தொடங்கும் மற்றொரு போட்டியில், பாகிஸ்தான் மற்றும் சீனா அணிகள் மோதுகின்றன. இதுவரையில் இரு அணிகளும் 3 போட்டிகளில் விளையாடியுள்ளன. ஆனால், 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

முதல் அரைசதத்தை ரோகித் சர்மாவின் மகளுக்கு அர்ப்பணித்த திலக் வர்மா; வைரலாகும் வீடியோ!

இரவு 8.30 மணிக்கு நடக்கும் போட்டியில் இந்தியா மற்றும் தென் கொரியா அணிகள் மோதுகின்றன. இதில், 3 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வெற்றி பெற்று 5 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் உள்ளது. இதே போன்று இந்தியா 3 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்று 7 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

தேசிய ஈட்டி எறிதல் தினம்: 1000க்கும் மேற்பட்ட தடகள வீரர்கள் பங்கேற்கும் ஈட்டி எறிதல் போட்டிக்கு ஏற்பாடு!

இதுவரையில் இந்தியா 13 கோல் அடித்துள்ளது. அதுமட்டுமின்றி கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பு மூலமாக 10 கோல் வரையில் அடித்துள்ளது. இதில் இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் அதிகபட்சமாக 4 கோல் வரையில் அடித்துள்ளார்.

click me!