
ஆசிய மண்டல ஆண்கள் தொடர் ஓமன் நாட்டின் சலாலா நகரில் தொடங்கியது. இது வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் முதலாவது 5 பேர் ஹாக்கி உலகக் கோப்பை தொடருக்கான தகுதிச் சுற்று. இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் 5 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து அரையிறுதிப் போட்டியில் 10-4 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
Asia Cup 2023: 3 மாற்றங்களுடன் களமிறங்கிய வங்கதேசம்; டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!
இந்த நிலையில் தான் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியானது 4-4 என்ற கோல் கணக்கில் சமனான நிலையில், பெனால்டி ஷூட் அவுட் முறை நடத்தப்பட்டது. இதில், 2-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது.
இதன் மூலமாக வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள முதலாவது 5 பேர் ஹாக்கி உலகக் கோப்பை தொடருக்கும் தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.