#TokyoOlympics ஆடவர் ஹாக்கி: அர்ஜெண்டினாவை வீழ்த்தி காலிறுத்திக்குள் நுழைந்தது இந்திய அணி

By karthikeyan VFirst Published Jul 29, 2021, 7:54 AM IST
Highlights

டோக்கியோ ஒலிம்பிக் லீக் சுற்று ஹாக்கியில் அர்ஜெண்டினாவை வீழ்த்திய இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
 

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்றைய தினம் இந்தியாவிற்கு மகிழ்ச்சியளிக்கும் தினமாக அமைந்துள்ளது. மகளிர் பேட்மிண்டனில் டென்மார்க் வீராங்கனை மியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து.

அதைத்தொடர்ந்து, ஹாக்கியில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது இந்திய அணி. ஆடவர் ஹாக்கி லீக் சுற்றில், நியூசிலாந்தை வீழ்த்திய இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. அதற்கடுத்த போட்டியில் ஸ்பெய்னை வீழ்த்திய இந்திய அணி, இன்று அர்ஜெண்டினாவை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளுக்குமே ஒரு கோல் கூட கிடைக்கவில்லை. ஆட்டம் முடியப்போகும் தருவாயில், இந்தியாவின் வருண் குமார் ஒரு கோல் அடிக்க இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. ஆனால் அர்ஜெண்டினாவும் ஒரு கோல் அடிக்க 1-1 என சமனடைந்தது.

இதையடுத்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில், ஒலிம்பிக்கில் முதல் முறையாக ஆடும் இந்திய வீரர் விவேக் சாகர் 2 கோல்கள் அடிக்க, 3-1 என வெற்றி பெற்ற இந்திய அணி, காலிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி.
 

click me!