இந்தியா மற்றும் ஜப்பான் அணிகளுக்கு இடையிலான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் 2ஆவது அரையிறுதிப் போட்டி இன்று இரவு 8.30 மணிக்கு நடக்கிறது.
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் 7ஆவது சீசன் சென்னையில் நடந்து வருகிறது. கடந்த 3 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் நாளை 12 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதில், இந்தியா, சீனா, பாகிஸ்தான், தென் கொரியா, மலேசியா, ஜப்பான் ஆகிய 6 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன. இதில், சீனா மற்றும் பாகிஸ்தான் இரு அணிகளும் அரையிறுதி வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறிவிட்டன. எனினு, இன்று நடக்கும் முதல் போட்டியில் 5 ஆவது மற்றும் 6ஆவது இடத்திற்காக இரு அணிகளும் மோதுகின்றன.
Asian Games 2023: மீண்டும் வருவேன்: வாய்ப்பு பற்றி கவலை இல்லை – ஷிகர் தவான்!
இன்று இரவு 6.15 மணிக்கு நடக்கும் 2ஆவது போட்டியில் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் இருக்கும் மலேசியாவும், 3ஆவது இடத்தில் இருக்கும் தென் கொரியா அணியும் மோதுகின்றன. இது இரு அணிகளுக்கு இடையிலான முதல் அரையிறுதிப் போட்டி இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். தோல்வி அடையும் அணியானது, 12 ஆம் தேதி 6 மணிக்கு நடக்கும் போட்டியில் மற்றொரு அரையிறுதிப் போட்டியில் தோற்கும் அணியுடன் மோதும்.
பொம்மன் - பெல்லியை பெருமைப்படுத்தவே இந்த பெயர் - உதயநிதி தகவல்!
இரவு 8.30 மணிக்கு நடக்கும் 2ஆவது அரையிறுதிப் போட்டியில் புள்ளிப்பட்டியலில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் இந்தியாவும், 4ஆவது இடத்தில் இருக்கும் ஜப்பான் அணியும் மோதுகின்றன. இதில், வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இதுவரையில் இந்தியா 3 முறை ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரை கைப்பற்றியுள்ளது. தென் கொரியா அணி கடந்த சீசனில் வெற்றி பெற்று சாம்பியனானது. பாகிஸ்தான் 3 முறை சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றியிருக்கிறது. ஆனால், இந்த முறை பாகிஸ்தான் தொடரிலிருந்து வெளியேறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.