
இன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதும் ஆட்டம் மும்பையில் இன்று நடைபெறுகிறது.
நான்கு நாடுகள் இடையேயான இன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டியில் முதல் இரண்டு ஆட்டங்களில் வெற்றிப் பெற்று இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது இந்தியா. இந்த ஆட்டத்தில் வெல்லும் பட்சத்தில் ஹாட்ரிக் வெற்றியாக அது இருக்கும்.
இந்திய அணியைப் பொறுத்த வரையில் பிளேயிங் லெவனில் மாற்றங்கள் ஏதும் உறுதி செய்யப்படவில்லை. எனினும், சுனில் சேத்ரி, சந்தேஷ் ஜிங்கன் ஆகியோருக்கு ஓய்வளிக்க வாய்ப்பு இருக்கலாம். சேத்ரிக்கு பதிலாக பல்வந்த் சிங் களம் காண வாய்ப்புகள் அதிகம். முன்கள வீரர் ஜிஜி லால்பெக்லுவாவுக்கு, தேசிய அணியில் இது 50-வது ஆட்டமாகும்.
இந்தியாவுக்கு எதிரான இந்த ஆட்டம் சவாலானதாக இருக்கும் என்று நியூஸிலாந்து பயிற்சியாளர் ஃப்ரிட்ஸ் ஷ்மித் கூறியுள்ளார்.
இதனிடையே, இந்தியா - நியூஸிலாந்து ஆட்டம், ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதி ஆட்டம் ஆகியவற்றுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டதாக போட்டி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.