Hockey World Cup 2023:இந்தியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது நியூசிலாந்து! தொடரை விட்டு வெளியேறிய இந்தியா

By karthikeyan VFirst Published Jan 22, 2023, 9:21 PM IST
Highlights

ஹாக்கி உலக கோப்பை காலிறுதிக்கு தகுதிபெறும் கிராஸ் ஓவர் போட்டியில் நியூசிலாந்திடம் தோற்று இந்திய அணி தொடரைவிட்டு வெளியேறியது. நியூசிலாந்து அணி காலிறுதிக்கு முன்னேறியது. 
 

ஹாக்கி உலக கோப்பை தொடர் ஒடிசாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. உலக கோப்பையில் கலந்துகொண்ட அணிகள் 4 பிரிவுகளாக பிரித்து போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்த 4 அணிகள் நேரடியாக காலிறுதிக்கு முன்னேறின.

அந்தவகையில், ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நெதர்லாந்து, இங்கிலாந்து ஆகிய 4 அணிகளும் நேரடியாக காலிறுதிக்கு முன்னேறின. எஞ்சிய 4 இடங்களுக்கு 8 அணிகளுக்கு இடையே போட்டி. 4 பிரிவுகளிலும் புள்ளி பட்டியலில் 2 மற்றும் 3ம் இடங்களில் உள்ள அணிகளுக்கு இடையே கிராஸ் ஓவர் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெறும் 4 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.

Womens U19 T20 World Cup: இலங்கையை அசால்ட்டா வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

இன்று நடந்த முதல் கிராஸ் ஓவர் போட்டியில் மலேசியாவை வீழ்த்தி ஸ்பெய்ன் அணி காலிறுதிக்கு முன்னேறியது. அடுத்த கிராஸ் ஓவர் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதின. இந்த நாக் அவுட் போட்டியில் இரு அணிகளுமே அபாரமாக விளையாடி வெற்றிக்காக கடுமையாக போராடின. அபாரமாக ஆடிய இந்தியா - நியூசிலாந்து ஆகிய இரு அணிகளுமே ஆட்ட முடிவில் தலா 3 கோல்கள் அடிக்க ஆட்டம் டிராவானது.

இது நாக் அவுட் போட்டி என்பதால் போட்டியின் முடிவை தீர்மானிக்க வேண்டும் என்பதற்காக ஷூட் அவுட் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஷூட் அவுட்டில் நியூசிலாந்து 5 கோல்களையும், இந்தியா 4 கோல்களையும் அடிக்க, நியூசிலாந்து அணி வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதிபெற்றது. ஷூட் அவுட்டில் கோட்டை விட்ட இந்திய அணி தோல்வியை தழுவி தொடரை விட்டு ஏமாற்றத்துடன் வெளியேறியது.

சச்சின் - கோலி ஒப்பீடு.. கபில் தேவ் அதிரடி

நாளை(ஜனவரி23) ஜெர்மனி - ஃபிரான்ஸ் மற்றும் அர்ஜெண்டினா - கொரியா அணிகளுக்கு இடையேயான 2 கிராஸ் ஓவர் போட்டிகள் நடக்கின்றன. 

click me!