Hockey World Cup 2023: வேல்ஸ் அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி..!

By karthikeyan V  |  First Published Jan 19, 2023, 9:51 PM IST

ஹாக்கி உலக கோப்பையில் வேல்ஸ் அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய அணி, காலிறுதிக்கு தகுதிபெறுவதற்கான
 


ஹாக்கி உலக கோப்பை தொடர் ஒடிசாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. பிரிவு டி-யில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, முதல் போட்டியில் ஸ்பெய்னை வீழ்த்தி வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான அடுத்த போட்டி டிராவானது.

இதுலாம் கிரிக்கெட்டே இல்ல.. இஷான் கிஷனின் செயலை கடுமையாக விமர்சித்த கவாஸ்கர்

Tap to resize

Latest Videos

இன்று நடந்த போட்டியில் இந்திய அணி வேல்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியின் முதல் பாதி ஆட்டத்தில் இந்திய அணி 2 கோல்கள் அடிக்க, மூன்றாவது கால் பகுதி ஆட்டத்தில் வேல்ஸ் அணி 2 கோல்கள் அடித்து சமன் செய்தது. 

கடைசி கால் பகுதி ஆட்டத்தில் வெற்றியை கருத்தில்கொண்டு அபாரமாக ஆடிய இந்திய அணி 2 கோல்கள் அடிக்க, கடைசியில் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது இந்திய அணி.

IPL 2023: இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்ட தோனி.. வைரல் வீடியோ

கிராஸ் ஓவர் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது இந்திய அணி. அதில் ஜெயித்தால் காலிறுதிக்கு முன்னேறலாம்.

click me!