உலக கோப்பையில் ஆடப்போகும் இந்திய அணி இதுதான்!! க்ளூ கொடுத்த ரவி சாஸ்திரி

By karthikeyan VFirst Published Nov 16, 2018, 2:19 PM IST
Highlights

உலக கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி இன்னும் 13 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆட உள்ளதால், இனிமேல் எந்த விதமான பரிசோதனை முயற்சிகளும் செய்யப்படாது என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். 
 

உலக கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி இன்னும் 13 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆட உள்ளதால், இனிமேல் எந்த விதமான பரிசோதனை முயற்சிகளும் செய்யப்படாது என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். 

2019 மே 30ம் தேதி உலக கோப்பை தொடங்குகிறது. உலக கோப்பைக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், அதற்கு முன்னதாக இந்திய அணி 13 ஒருநாள் போட்டிகளில் ஆட உள்ளது. இதற்கிடையே இந்திய அணியின் மிடில் ஆர்டரில் நிலவிவந்த சிக்கலுக்கு ராயுடு மற்றும் ரிஷப் பண்ட்டின் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது. 

ரோஹித், தவான், கோலி ஆகிய மூவரும் முதல் மூன்று இடங்களில் வலுவாக உள்ளனர். ஆசிய கோப்பை மற்றும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர் ஆகியவற்றில் சிறப்பாக ஆடி நான்காமிடத்தை பிடித்துள்ளார் ராயுடு. 5ம் வரிசை வீரராக ரிஷப் பண்ட் இருப்பார். 6வது வரிசையில் விக்கெட் கீப்பர் தோனி, 7ம் வரிசையில் ஜடேஜாவோ ஹர்திக் பாண்டியாவோ சூழலுக்கும் எதிரணிக்கும் ஏற்றவாறு களமிறக்கப்படலாம். அதற்கு அடுத்து பவுலர்களான புவனேஷ்வர் குமார், பும்ரா, குல்தீப், சாஹல் ஆகியோர் இருப்பர். 

கேதர் ஜாதவ், உமேஷ் யாதவ், கலீல் அகமது ஆகியோர் 15 பேர் கொண்ட அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. இதுதான் தற்போதைக்கு உலக கோப்பைக்கு செல்ல வாய்ப்புள்ள இந்திய அணி. இதற்கு முன்னதாக தினேஷ் கார்த்திக், மனீஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர், ரஹானே ஆகியோரை மிடில் ஆர்டரில் களமிறக்கி பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 

உலக கோப்பைக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், இந்திய அணி அதற்கு முன்னதாக இன்னும் 13 போட்டிகளில் மட்டுமே ஆட உள்ள நிலையில், மேலும் ராயுடு 4ம் இடத்தில் செட்டாகிவிட்டதால் இனிமேல் பரிசோதனை முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்பட மாட்டாது என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. அதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்றது. முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ரவி சாஸ்திரி, உலக கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி 13 போட்டிகளில் மட்டுமே ஆட உள்ளதால் இனிமேல் எந்தவிதமான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட மாட்டாது. உலக கோப்பையில் ஆட உள்ள 15 வீரர்களை கொண்ட அணிதான் இனிவரும் போட்டிகளில் ஆடும். ஆஸ்திரேலியாவில் அந்த அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள், நியூசிலாந்தில் அந்த அணிக்கு எதிராக 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் இந்தியாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 ஒருநாள் போட்டிகள் என மொத்தம் 13 போட்டிகள் உலக கோப்பைக்கு முன்னதாக ஆட உள்ளோம். இந்த போட்டிகளில் இந்திய அணியில் இடம்பெறும் 15 வீரர்கள் மட்டுமே மாறி மாறி களமிறக்கப்படுவர் என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். 

click me!