ஒரு காலத்துல செம கெத்தா இருந்த வீரர்!! அசால்ட்டா தூக்கி எறிந்த ஆர்சிபி

By karthikeyan VFirst Published Nov 16, 2018, 1:37 PM IST
Highlights

2019 ஐபிஎல்லுக்கான ஏலம் அடுத்த மாதம் நடக்க உள்ள நிலையில், கடந்த சீசனில் தங்கள் அணியில் இருந்த 10 வீரர்களை விடுவித்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. 
 

2019 ஐபிஎல்லுக்கான ஏலம் அடுத்த மாதம் நடக்க உள்ள நிலையில், கடந்த சீசனில் தங்கள் அணியில் இருந்த 10 வீரர்களை விடுவித்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. 

இதுவரை 11 ஐபிஎல் சீசன்கள் முடிந்துள்ள நிலையில், ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத மூன்று அணிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவும் ஒன்று. டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய மூன்று அணிகளும் ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. 

ஆர்சிபி அணியில் விராட் கோலி, டிவில்லியர்ஸ் ஆகிய இருபெரும் ஜாம்பவான்கள் இருக்கும்நிலையிலும், அந்த அணி ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. கடந்த சீசனில் விராட் கோலி, டிவில்லியர்ஸ், மெக்கல்லம், குயிண்டன் டி காக், பார்த்திவ் படேல், உமேஷ் யாதவ் என வலிமையான படையுடன் களமிறங்கிய போதிலும் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறவில்லை. 

எனவே அடுத்த சீசனில் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது பெங்களூரு அணி. அதற்காக தலைமை பயிற்சியாளரை ஏற்கனவே அதிரடியாக மாற்றியது ஆர்சிபி அணி. டேனியல் வெட்டோரியிடமிருந்து தலைமை பயிற்சியாளர் பொறுப்பை பறித்து கேரி கிறிஸ்டியனிடம் கொடுத்துள்ளது. 

இந்நிலையில், ஐபிஎல் 12வது சீசனுக்கான ஏலம் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைத்துக்கொள்ள விரும்பாத வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ஆர்சிபி அணியும் விடுவிக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

அதிரடி பேட்ஸ்மேனும் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனுமான பிரண்டன் மெக்கல்லத்தை ஆர்சிபி அணி விடுவித்துள்ளது. பிரண்டன் மெக்கல்லம் மிகச்சிறந்த வீரர். அதிரடியான பேட்டிங், அசத்தலான ஃபீல்டிங்கின் மூலம் தான் ஆடும் அணிக்கு முழு பங்களிப்பை அளிக்கும் வீரர். ஐபிஎல் வரலாற்றின் முதல் போட்டியிலேயே சதமடித்தவர் மெக்கல்லம். ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இவருடையது தான். முதல் ஐபிஎல் போட்டியிலேயே இவர் அடித்த 158 ரன்கள் தான் இதுவரை ஐபிஎல் வரலாற்றில் ஒரு பேட்ஸ்மேன் அடித்த இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர். 

இப்படியாப்பட்ட வீரரான மெக்கல்லம், கடந்த சீசனில் ஆர்சிபி அணிக்காக சரியாக ஆடவில்லை. அந்த அணியின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் அவரை அந்த அணி விடுவித்துள்ளது. ஏற்கனவே குயிண்டன் டி காக்கை மும்பை இந்தியன்ஸுக்கு வழங்கியது ஆர்சிபி. 

மேலும் கிறிஸ் வோக்ஸ், சர்ஃப்ராஸ் கான், மனன் வோரா, முருகன் அஷ்வின், மந்தீப் சிங், கோரி ஆண்டர்சன், அங்கிட் சௌத்ரி, அனிருதா ஜோஷி, பவன் தேஷ்பாண்டே ஆகிய வீரர்களையும் அந்த அணி விடுவித்துள்ளது. 

ஆர்சிபி அணியால் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:

விராட் கோலி(கேப்டன்), டிவில்லியர்ஸ், மொயின் அலி, வாஷிங்டன் சுந்தர், குல்டர் நைல், கிராண்ட் ஹோம், உமேஷ் யாதவ், சாஹல், பார்த்திவ் படேல், பவன் நேகி, சைனி, கேஜ்ரோலியா, முகமது சிராஜ், டிம் சௌதி. 
 

click me!