ஃபிஃபா உலக கோப்பையில் ஆடும் சில கால்பந்து வீரர்கள் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்

By karthikeyan V  |  First Published Nov 18, 2022, 4:55 PM IST

ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையில் ஆடும் சில கால்பந்து வீரர்கள் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பார்ப்போம்.
 


ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை திருவிழா வரும் 20ம் தேதி தொடங்குகிறது. ஃபிஃபா உலக கோப்பையை நடக்கும் கத்தார் விழாக்கோலம் பூண்டுள்ளது. 22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையில் 32 அணிகள் கலந்துகொண்டு ஆடுகின்றன. இந்த 32 அணிகளும் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டித்தொடர் நடத்தப்படுகிறது.

லியோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகிய கால்பந்து ஜாம்பவான்களுக்கு இதுவே கடைசி உலக கோப்பை என்பதால், அவர்கள் தங்கள் அணிக்கு உலக கோப்பையை வென்று கொடுக்கும் முனைப்பில் இருப்பதால் இந்த உலக கோப்பை மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. உலக கோப்பையில் கலந்துகொள்ளும் அனைத்து நாட்டு அணிகளும் தோஹாவிற்கு சென்றுவிட்டன.

Tap to resize

Latest Videos

undefined

ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை: பயிற்சி போட்டிகளில் அர்ஜெண்டினா, ஜெர்மனி அணிகள் வெற்றி

இந்நிலையில், 22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையில் கலந்துகொண்டு ஆடும் சில வீரர்கள் குறித்த சுவாரஸ்யமான  தகவல்களை பார்ப்போம்.

1. உயரமான வீரர் - ஆண்ட்ரிஸ் நோப்பர்ட் (நெதர்லாந்து)

நெதர்லாந்து அணியின் கோல்கீப்பர் ஆண்ட்ரிஸ் நோப்பர்ட். இவர் தான் இந்த ஃபிஃபா உலக கோப்பையில் ஆடும் உயரமான வீரர் ஆவார். இவரது உயரம் 6 அடி 6 இன்ச் ஆகும். 

2. உயரம் குறைவான வீரர் - இலியாஸ் சேர் (மொராக்கோ)

மொராக்கோ அணி கால்பந்து வீரர் இலியாஸ் சேர். இவரது உயரம் 5 அடி இன்ச். இவர்தான் இந்த உலக கோப்பையில் ஆடும் உயரம் குறைவான வீரர் ஆவார். இவர் உயரம் குறைவாக இருந்தாலும், மொராக்கோ அணியின் முக்கியமான வீரர் இலியாஸ். இந்த உலக கோப்பையில் மொராக்கோ அணியின் வெற்றிக்கு முக்கிய அங்கம் வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3. வயதான வீரர் - அல்ஃப்ரெடோ டலவெரா (மெக்ஸிகோ)

மெக்ஸிகோ அணி வீரர் அல்ஃப்ரெடோ டலவெரா. 40 வயதான இவர் தான் இந்த உலக கோப்பையில் ஆடும் வயது முதிர்ந்த வீரர். டேனி ஆல்வ்ஸ்(39), தியாகோ சில்வா (38), கிறிஸ்டியானோ ரொனால்டோ (37) ஆகிய வீரர்கள் இந்த பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

4. இளம் வீரர் - யூசுஃபா மௌகாகோ (ஜெர்மனி)

ஜெர்மனியை சேர்ந்த யூசுஃபா, 17 வயது இளம் வீரர். கத்தாரில் நடக்கும் ஃபிஃபா உலக கோப்பையில் ஆடும் இளம் வயது வீரர் இவர்தான். எதிர்காலத்தில் மிகச்சிறந்த கால்பந்து வீரராக ஜொலிக்கவுள்ளார். ஜெர்மனி வீரர் டிமோ வெர்னெர் காயத்தால் இந்த உலக கோப்பையில் ஆடமுடியாததால் அவருக்கு பதிலாக அணியில் எடுக்கப்பட்டவர் தான் இந்த யூசுஃபா.

Forbes 2022: அதிகம் சம்பாதிக்கும் டாப் 10 கால்பந்து வீரர்கள்! மெஸ்ஸி, ரொனால்டோவை முந்தி முதலிடம் பிடித்த வீரர்

5. அதிக கோல்கள் - தாமஸ் முல்லர் (ஜெர்மனி)

ஜெர்மனி அணியின் வீரர் தாமஸ் முல்லர். இப்போது ஆடும் வீரர்களில் இவர் தான் உலக கோப்பையில் தனது அணிக்காக அதிக கோல் அடித்த வீரர். 10 கோல்கள் அடித்துள்ள முல்லர், 6 கோல்களுக்கு உதவி புரிந்துள்ளார். 2014ம் ஆண்டு ஜெர்மனி அணி ஃபிஃபா உலக கோப்பையை வென்றபோது, சில்வர் பந்தை வென்றவர் தாமஸ் முல்லர் ஆவார்.
 

click me!