ஷாஹீன் அஃப்ரிடி வலி நிவாரணி எடுத்துட்டு ஆடியிருக்கணும்..! மருமகனை பற்றி பேசிய அக்தரை விளாசிய அஃப்ரிடி

By karthikeyan V  |  First Published Nov 18, 2022, 3:39 PM IST

டி20 உலக கோப்பை ஃபைனலில் காயம் காரணமாக ஷாஹீன் அஃப்ரிடி காயம் காரணமாக அவரது கடைசி 2 ஓவர்களை வீசமுடியாமல் போன நிலையில், அவர் வலிநிவாரணி எடுத்துக்கொண்டு அந்த 2 ஓவர்களை வீசியிருக்க வேண்டும் என்று கூறிய அக்தருடன் முரண்பட்டுள்ளார் ஷாஹித் அஃப்ரிடி.
 


டி20 உலக கோப்பை ஃபைனலில் இங்கிலாந்தும் பாகிஸ்தானும் மோதின. மெல்பர்னில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி, 20 ஓவரில் வெறும் 137 ரன்கள் மட்டுமே அடித்தது. 138 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி 19வது ஓவரில் இலக்கை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 உலக கோப்பையை 2வது முறையாக வென்றது.

இங்கிலாந்து அணி இலக்கை எளிதாக விரட்டிவிடவில்லை. மற்ற வீரர்கள் எல்லாம் ஆட்டமிழக்க, பென் ஸ்டோக்ஸ் மட்டும் நிலைத்து நின்று ஆடினார். ஆனால் அவரும் ஹாரிஸ் ராஃப், நசீம் ஷாவின் வேகத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தான் ஆடினார். ஆனால் இலக்கு குறைவானது என்பதால் ஆட்டத்தை கடைசி வரை எடுத்துச்சென்றால் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர்களுக்கு விக்கெட்டை மட்டும் விட்டுக்கொடுக்காமல் தட்டுத்தடுமாறி ஆட்டத்தை எடுத்துச்சென்றார். 

Tap to resize

Latest Videos

undefined

13வது ஓவரில் ஹாரி ப்ரூக்கின் கேட்ச்சை பிடிக்கும்போது ஷாஹீன் அஃப்ரிடியின் வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது. அதனால் களத்தைவிட்டு வெளியேறினார். அவர் களத்தை விட்டு வெளியேறும்போது, எஞ்சிய 7 ஓவர்களில் 2 ஓவர்கள் அவருக்கு மீதமிருந்தது. லேசான காயம் தான் என்பதால் அவர் சிறிய சிகிச்சைக்கு பிறகு திரும்பி வந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

பாகிஸ்தான் டி20 அணி கேப்டன்சியிலிருந்து பாபர் அசாம் விலகவேண்டும்! டி20 அணி கேப்டனாக அவரை நியமிக்கணும்-அஃப்ரிடி

அவர் களத்தைவிட்டு வெளியே சென்ற பின், 14 மற்றும் 15வது ஓவர்களை நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ராஃப் ஆகிய இருவரும் அபாரமாக வீசி நம்பிக்கையளித்தனர். 14வது ஓவரில் நசீம் ஷா வெறும் 2 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 15வது ஓவரில் ஹாரிஸ் ராஃப் 8 ரன் கொடுத்தார். அந்த 2 ஓவரில் மொத்தமாகவே இங்கிலாந்துக்கு 10 ரன்கள் மட்டுமே கிடைக்க, 15 ஓவரில் இங்கிலாந்து அணி 97 ரன்கள் அடித்திருந்தது. கடைசி 5 ஓவரில் 41 ரன்கள் இங்கிலாந்துக்கு தேவைப்பட்டது. கடைசி 5 ஓவரில் ஷாஹீன் அஃப்ரிடிக்கு 2 ஓவர்கள் மீதமிருந்தது. அவர் அந்த 2 ஓவரை வீசியிருந்தால் ஆட்டமே மாறியிருக்கும். ஏனெனில் பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர்கள் அந்தளவிற்கு நெருக்கடியை உருவாக்கியிருந்தனர். ஆனால் 16வது ஓவரை வீசவந்த ஷாஹீன் அஃப்ரிடி, முதல் பந்தை மட்டும் வீசிவிட்டு வலியால் மீண்டும் பெவிலியன் திரும்பினார். அதனால் எஞ்சிய 5 பந்துகளை வேறு பவுலர் வீச நேர்ந்தது. அந்த 5 பந்துகளை இஃப்டிகார் அகமது வீச, அந்த 5 பந்தில் பென் ஸ்டோக்ஸ் ஒரு பவுண்டரியும் ஒரு சிக்ஸரும் அடிக்க, ஆட்டம் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருந்து இங்கிலாந்துக்கு கைமாறியது.

முகமது வாசிம் வீசிய அடுத்த ஓவரில் மொயின் அலி 3 பவுண்டரிகள் அடிக்க, இங்கிலாந்துக்கு இலக்கை விரட்டுவது எளிதானது. கடைசியில் 19வது ஓவரிலேயே ஆட்டத்தை முடித்து இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. ஒருவேளை ஷாஹீன் அஃப்ரிடி அந்த 2 ஓவர்களை வீசியிருந்தால் பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர்கள் நெருக்கடியை அதிகப்படுத்தி வெற்றியை சாத்தியமாக்கியிருக்கக்கூடும்.

பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள், ரசிகர்களும் அதைத்தான் நினைத்தனர். அதுகுறித்து கருத்து கூறிய பாகிஸ்தான் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் ஷோயப் அக்தர், அணியின் முக்கியமான பவுலர் ஃபிட்டாக இல்லையென்றால் அது அணிக்கு பெரிய பிரச்னையாக அமையும். ஷாஹீன் அஃப்ரிடி முழு ஃபிட்னெஸுடன் இல்லை. ஆனால் அவர் மீது குறைசொல்ல முடியாது. அதற்கு முந்தைய 2-3 போட்டிகளில் அருமையாக பந்துவீசினார். ஆனால் உலக கோப்பை ஃபைனலில் காலே உடைந்தால்கூட அதையெல்லாம் சமாளித்து பந்துவீசியிருக்க வேண்டும். வலிநிவாரணி எடுத்துக்கொண்டு பந்துவீசியிருக்கலாம். அது ஒரு உலக கோப்பை ஃபைனல். அந்த போட்டியில் ரிஸ்க் எடுத்தாவது பந்துவீசியிருக்க வேண்டும். கேப்டன் இடத்திலிருந்து ஒரு வீரர் யோசிக்க வேண்டும் என்று அக்தர் கூறினார்.

இவ்வளவு பிரேக் எதற்கு..? இந்நாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை விளாசும் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி

ஆனால் அக்தரின் கருத்துடன் ஷாஹீன் அஃப்ரிடியின் மாமாவும், முன்னாள் கேப்டனுமான ஷாஹித் அஃப்ரிடி முரண்பட்டுள்ளார். அக்தரின் கருத்து குறித்து பேசிய அஃப்ரிடி, அக்தர் கூறுவது தவறு. வலிநிவாரணி எடுப்பதற்கு ஒரு முறை உள்ளது. நானும் வலிநிவாரணி எடுத்திருக்கிறேன். வலிநிவாரணியால் பக்கவிளைவுகள் ஏற்படும். ஆட்டம் முடிந்தபின் வலி அதிகமாகிவிடும் என்று அஃப்ரிடி தெரிவித்தார்.
 

click me!