NZ vs IND: இரு அணிகளின் ஆட்டத்தையும் சேர்த்து ஆடிய மழை.. முதல் டி20 கைவிடப்பட்டது..! ரசிகர்கள் ஏமாற்றம்

By karthikeyan VFirst Published Nov 18, 2022, 2:01 PM IST
Highlights

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது.
 

இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. டி20 உலக கோப்பை தோல்விக்கு பின் நடக்கும் இந்த தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ராகுல் ஆகிய சீனியர் வீரர்கள் ஆடவில்லை. ஜடேஜா, பும்ரா காயத்தால் ஆடவில்லை. 

ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி டி20 தொடரில் ஆடுகிறது. இந்த தொடரில் ஷுப்மன் கில், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் ஆகிய இளம் பேட்ஸ்மேன்கள் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும் பவுலிங்கை பொறுத்தமட்டில் 150 கிமீ வேகத்திற்கு மேல் வீசக்கூடிய உம்ரான் மாலிக் மீதும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

இவ்வளவு பிரேக் எதற்கு..? இந்நாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை விளாசும் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி

ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக ஆடுவதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருக்கும் நிலையில், முதல் டி20 போட்டி மழையால் ரத்தானது. 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி வெலிங்டனில் இந்திய நேரப்படி பிற்பகல் 12 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால் வெலிங்டனில் மழை பெய்ததால் காத்திருக்கப்பட்டது. இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு மேலும் மழை தொடர்ந்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது.

அதனால் இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியில் இளம் இந்திய அணியின் ஆட்டத்தை பார்க்க காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். அடுத்த டி20 போட்டி வரும் 20ம் தேதியும், கடைசி டி20 போட்டி வரும் 22ம் தேதியும் நடக்கின்றன.

சிஎஸ்கே கழட்டிவிட்ட கோபத்தை களத்தில் காட்டும் தமிழக வீரர்! விஜய் ஹசாரே தொடரில் ஹாட்ரிக் சதமடித்த ஜெகதீசன்

அதன்பின்னர் ஷிகர் தவான் தலைமையில் இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்தை எதிர்கொண்டு ஆடுகிறது.
 

click me!