இவ்வளவு பிரேக் எதற்கு..? இந்நாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை விளாசும் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி

By karthikeyan VFirst Published Nov 17, 2022, 9:40 PM IST
Highlights

இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அதிகமான பிரேக் எடுப்பதாக முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விமர்சித்துள்ளார்.
 

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக 2017லிருந்து இருந்துவந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் கடந்த காலம் முடிந்த நிலையில், அதன்பின்னர் ராகுல் டிராவிட் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றார். 

இந்திய அண்டர் 19 மற்றும் இந்தியா ஏ அணிகளின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு அடுத்த தலைமுறை திறமையான இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்கி கொடுத்தார். அண்டர் 19 உலக கோப்பையை 2018ல் இந்திய அணிக்கு வென்று கொடுத்தார். எனவே இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்றதும், அவரது பயிற்சியில் இந்திய அணியிடமிருந்து பெரிதாக எதிர்பார்கப்பட்டது.

சிஎஸ்கே கழட்டிவிட்ட கோபத்தை களத்தில் காட்டும் தமிழக வீரர்! விஜய் ஹசாரே தொடரில் ஹாட்ரிக் சதமடித்த ஜெகதீசன்

ஆனால் ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை ஆகிய பெரிய தொடர்களில் இந்திய அணி அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து ஏமாற்றமளித்தது. டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனே சரியில்லை என்பது குற்றச்சாட்டு. யுஸ்வேந்திர சாஹலை ஆடவைக்காததும், தொடக்கத்திலிருந்தே ரிஷப் பண்ட்டை ஆடவைக்காததும், வீரர்களின் ரோலில் தெளிவில்லாததும் கடும் விமர்சனத்துக்குள்ளானது.

டி20 உலக கோப்பை தொடர் முடிந்து நடைபெறும் இந்தியா - நியூசிலாந்து இடையேயான தொடரில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பிரேக் எடுத்த நிலையில், அதை கடுமையாக விமர்சித்துள்ளார் ரவி சாஸ்திரி. இந்த ஆண்டில் இதற்கு முன் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திலும் ராகுல் டிராவிட் பிரேக் எடுத்த நிலையில், இப்போது நியூசிலாந்து சுற்றுப்பயணத்திலும் பிரேக் எடுத்திருப்பதை ரவி சாஸ்திரி விமர்சித்துள்ளார்.

டி20 உலக கோப்பை: இந்தியாவின் தோல்விக்கு அதுதான் காரணம்.! ரோஹித் - டிராவிட்டிடம் விளக்கம் கேட்கும் முகமது கைஃப்

இதுகுறித்து பேசிய ரவி சாஸ்திரி, பிரேக் எடுப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. எனது அணியை பற்றியும் எனது வீரர்களை பற்றியும் நன்றாக தெரிந்துகொள்ள அவர்களுடன் அதிகமான நேரம் இருக்கத்தான் விரும்புவேன். இவ்வளவு அதிகமான பிரேக்குகள் எதற்கு..? உண்மையாகவே எனக்கு தெரியவில்லை. ஐபிஎல் நடக்கும் 2-3 மாதங்கள் ஓய்வில் தானே இருக்கிறீர்கள். அந்த ஓய்வே போதுமானது. மற்ற நேரம் முழுவதும் ஒரு பயிற்சியாளராக அணியுடன் இருக்கவேண்டும். பயிற்சியாளர் யாராக வேண்டுமானால் இருக்கட்டும். ஆனால் பிரேக் எடுக்காமல் அணியுடன் இருக்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
 

click me!