டி20 உலக கோப்பை: இந்தியாவின் தோல்விக்கு அதுதான் காரணம்.! ரோஹித் - டிராவிட்டிடம் விளக்கம் கேட்கும் முகமது கைஃப்

By karthikeyan V  |  First Published Nov 17, 2022, 8:29 PM IST

டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் தோல்விக்கு யுஸ்வேந்திர சாஹலை ஆடவைக்காதது தான் காரணம் என்று குற்றம்சாட்டியுள்ள  முகமது கைஃப், அதற்கான காரணத்தை கேப்டன் ரோஹித் சர்மாவும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் தான் கூறவேண்டும் என்று முகமது கைஃப் கூறியுள்ளார்.
 


டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கபட்ட இந்திய அணி, அரையிறுதியில் இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறியது. இந்த டி20 உலக கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. பும்ரா, ஜடேஜா ஆகிய 2 முக்கியமான பெரிய வீரர்கள் காயத்தால் ஆடாதபோதிலும், ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் நன்றாக செயல்பட்டதால் அரையிறுதி வரை முன்னேறியது. ஆனால் அரையிறுதியில் படுமோசமாக தோற்று தொடரைவிட்டு வெளியேறியது. 

அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 168 ரன்கள் அடிக்க, 169 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்துஅணியின் தொடக்க வீரர்கள் ஜோஸ்பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகிய இருவருமேஅடித்துவிட்டனர். இந்திய அணியால் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியாமல் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. 

Tap to resize

Latest Videos

undefined

AUS vs ENG: கிட்டத்தட்ட சிக்ஸருக்கு சென்றுவிட்ட பந்தை செமயா டைவ் அடித்து தடுத்த அஷ்டான் அகர்..! வைரல் வீடியோ

இந்த தொடரில் இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் பும்ரா இல்லாதபோதிலும் முடிந்தவரை சிறப்பாக செயல்பட்டது. ஆனால் ஸ்பின் பவுலிங் தான் மிகப்பெரிய பலவீனமாக இருந்தது. அஷ்வின் இந்த தொடரில் மிடில் ஓவர்களில் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறியதுடன், அதிகமான ரன்களையும் வாரி வழங்கிவந்தார். சூப்பர் 12 சுற்றில் 5 போட்டிகளில் 6 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். அதில் 3 விக்கெட் ஜிம்பாப்வேவுக்கு எதிராகவீழ்த்தியது. ஜிம்பாப்வே வீரர்களின் விக்கெட்டை அஷ்வின் வீழ்த்தவில்லை. அவர்களாகவே தவறுசெய்து விக்கெட்டுக்கு தகுதியில்லாத பந்துக்கெல்லாம் விக்கெட்டை பறிகொடுத்து சென்றனர் என்பது அஷ்வினுக்கே தெரியும்.

டி20 கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் பவர்ப்ளே மற்றும் டெத் ஓவர்களில் பேட்ஸ்மேன்கள் அடித்து ஆடுவார்கள். மிடில் ஓவர்களில் ரன்னை கட்டுப்படுத்தி 2-3 விக்கெட் வீழ்த்தி கொடுக்க வேண்டியதுதான் ஸ்பின்னர்கைன் கடமை. அந்த கடமையை அஷ்வின் சரியாக செய்யவில்லை. அஷ்வின் பவுலிங் எடுபடவில்லை. அவர் திணறுகிறார் என்பதை கண்ட ஹர்பஜன் சிங், கௌதம் கம்பீர் ஆகியோர் அஷ்வினுக்கு பதிலாக ரிஸ்ட் ஸ்பின்னர் சாஹலை ஆடவைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஆனால் சாஹலுக்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆடம் ஸாம்பா, அடில் ரஷீத், ஷதாப் கான், ரஷீத் கான், இஷ் சோதி, வனிந்து ஹசரங்கா, ஷம்ஸி என அனைத்து அணிகளிலும் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் இந்த உலக கோப்பையில் ஜொலித்தனர். ஆஸ்திரேலிய மைதானங்கள் பெரியவை என்பதால் சாஹல் தூக்கிப்போட்டு பேட்ஸ்மேனைஅடிக்கவைத்து விக்கெட் வீழ்த்தி கொடுக்கக்கூடியவர். எனவே அவரை கண்டிப்பாக ஆடவைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் அவருக்கு வாய்ப்பே வழங்கப்படவில்லை.

2017ம் ஆண்டிலிருந்து வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இந்திய அணியின் முன்னணி ஸ்பின்னராக இருந்துவரும் யுஸ்வேந்திர சாஹல், 2021ல் அமீரகத்தில் நடந்த டி20 உலக கோப்பையிலும் ஆட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த டி20 உலக கோப்பையிலும் அவருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. இந்த 2 உலக கோப்பைகளிலும் இந்திய அணி மிடில் ஓவர்களில் விக்கெட் வீழ்த்த முடியாமல் தோல்வியை தழுவியது. 

யுஸ்வேந்திர சாஹலை ஆடவைக்காதது இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அஷ்வின் - அக்ஸர் படேல் மிடில் ஓவர்களில் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறியபோதிலும், சாஹலுக்கு வாய்ப்பே வழங்கப்படவில்லை. மிக உறுதியுடன் சாஹலை ஆடவைக்காமல் பென்ச்சில் உட்காரவைத்தது இந்திய அணி நிர்வாகம்.

இந்நிலையில், அதற்கான காரணத்தை கேப்டன் ரோஹித்தும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் தான் கூற வேண்டும் என்று முகமது கைஃப் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பேசிய முகமது கைஃப், லெக் ஸ்பின்னர்கள் முக்கிய அங்கம் வகித்தனர். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகள் லெக் ஸ்பின்னர்களை ஆடவைத்தனர். ஆனால் ஐசிசி பவுலர்கள் ரேங்கிங்கில்  டாப் 10ல் 4-5 பேர் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் தான். ஆஸ்திரேலியாவில் ஆஃப் ஸ்பின்னர்களுக்கு எந்த ஒத்துழைப்பும் இருக்காது. ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் நல்ல பவுன்ஸ் இருக்கும். எனவே ரிஸ்ட் ஸ்பின்னர்கள் சோபிப்பார்கள். சாஹலை ஆடவைக்காதது பெரிய தவறு. ரோஹித்தும் டிராவிட்டும் தான் விளக்கமளிக்க வேண்டும்.

ஐபிஎல் 2023: சிஎஸ்கே அணியின் தோனிக்கு அடுத்த கேப்டன் இவர்தான்..! சர்ப்ரைஸ் தேர்வு

கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையிலும் சாஹலை ஆடவைக்கவில்லை. ஐபிஎல் அடிப்படையில் வருண் சக்கரவர்த்தியை கடந்த உலக கோப்பையில் ஆடவைத்தனர். ஐபிஎல்லை வைத்து தேர்வாளர்கள் அணி தேர்வு செய்வது தவறு. அதில் தான் தவறு செய்கின்றனர் என்று முகமது கைஃப் கருத்து கூறியுள்ளார்.
 

click me!