ஹரியானாவை ஒன்னுமே செய்ய முடியல – எவ்வளவு போராடியும் தமிழ் தலைவாஸ் அணிக்கு தோல்வி தான் மிச்சம்!

By Rsiva kumar  |  First Published Dec 26, 2023, 8:30 AM IST

ஹரியான ஸ்டீலர்ஸ் அணிக்கு எதிராக நேற்று சென்னையில் நடந்த புரோ கபடி லீக்கின் 41ஆவது போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியை தழுவியுள்ளது.


கடந்த 2ஆம் தேதி முதல் 10ஆவது சீசனுக்கான புரோ கபடி லீக் தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு காளைகள், தபாங் டெல்லி, குஜராத் ஜெயிண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்தான், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா, யுபி யோதாஸ் என்று 12 அணிகள் இடம் பெற்றுள்ளன.

SA vs IND Test: சேவாக் சதம் அடிச்ச மாதிரி ஜெய்ஸ்வாலும் அடிப்பார்னு எதிர்பார்க்க கூடாது – கவுதம் காம்பீர்!

Tap to resize

Latest Videos

அகமதாபாத், பெங்களூரு, புனே ஆகிய பகுதிகளில் போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில் தற்போது சென்னையில் நடக்கிறது. இங்கு மட்டும் 6 நாட்கள் போட்டிகள் நடத்தப்படுகிறது. வரும் 28ஆம் தேதி போட்டி முடியும் நிலையில் அடுத்ததாக நொய்டா, மும்பை, ஜெய்பூர், ஹைதராபாத், பாட்னா, டெல்லி, கொல்கத்தா, பஞ்ச்குலா ஆகிய பகுதிகளில் போட்டி நடக்கிறது.

இதுவரையில் தமிழ் தலைவாஸ் விளையாடிய 6 போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றி பெற்று 4ல் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 11ஆவது இடம் பிடித்துள்ளது. இந்த நிலையில் நேற்று சென்னையில் நடந்த புரோ கபடி லீக் தொடரின் 40ஆவது போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் மற்றும் தாபங் டெல்லி அணிகள் மோதின.

டெல்லி கேபிடல்ஸூக்கு தாவும் ரோகித் சர்மா? ரெடியா இருக்கும் கங்குலி!

இதில், தாபங் டெல்லி அணியானது 38 – 29 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து தமிழ் தலைவாஸ் அணியானது தனது ஹோம் மைதானத்தில் 3 ஆவது போட்டியில் களமிறங்கியது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தப் போட்டியிலும் தோல்வி அடைந்து ஹாட்ரிக் தோல்வியை தழுவியது. சென்னையில் நேற்று நடந்த 41ஆவது போட்டியில் தமிழ் தலைவாஸ் மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. இதில், இரு அணிகளும் தொடக்க முதலே சமமாக இருந்தன. முதல் பாதியின் முதல் 10 நிமிடங்களில் தமிழ் தலைவாஸ் 6 புள்ளிகள் கைப்பற்றியது.

South Africa vs India, Centurion First Test: பிரசித் கிருஷ்ணாவை எடுத்திடாதீங்க – சுனில் கவாஸ்கர் அட்வைஸ்!

ஆனால், அடுத்த 10 நிமிடங்களில் ஹரியானா அணி சுதாரித்துக் கொண்டு ரெய்டு செய்து தமிழ் தலைவாஸ் அணி வீரர்களை காலி செய்தனர். அனைவரும் அவுட் ஆகினர். இதன் காரணமாக ஹரியானாவின் புள்ளிகள் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. அதன் பிறகு முதல் பாதி முடியும் போது தமிழ் தலைவாஸ் 12 புள்ளிகளும், ஹரியானா 18 புள்ளிகளும் எடுத்திருந்தது. இதையடுத்து ஹரியானா தொடர்ந்து புள்ளிகள் பெற்று வந்தது. தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் ரெய்டுக்கு சென்றாலும், தோல்வியோடும், எம்ப்டி ரெய்டாகவும் திரும்பினர். ஆனால், ஹரியானாவின் ரெய்டர்களும், டிஃபெண்டர்களும் பாய்ண்டுகளை அள்ளினர்.

ஆர்சிபி அணியில் எந்த கம்யூனிகேஷனும் இல்லை – ஹர்ஷல் படேலுக்காக வரிந்து கட்டிக் கொண்டு வந்த ஆகாஷ் சோப்ரா!

தமிழ் தலைவாஸ் அணியில் டிஃபெண்டர் எம் அபிஷேக் ஒரு பாய்ண்டும், டிஃபெண்டர் கேப்டன் சாகர் 4 பாய்ண்டும், ரெய்டர் ஜடின் ஒரு பாய்ண்டும், ரெய்டர் அஜின்க்யா பவார் 3 பாய்ண்டும் எடுத்தனர். மொத்தமாக 12 ரெய்டு மற்றும் 16 டேக்கிள் பாய்ண்டுகளை தமிழ் தலைவாஸ் எடுத்தது. இறுதியாக ஹரியானா 42 புள்ளிகளும், தமிழ் தலைவாஸ் அணி 29 புள்ளிகளும் எடுத்தது. இதன் மூலமாக 13 புள்ளிகள் வித்தியாசத்தில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக ஹோம் மைதானத்தில் நடந்த 3ஆவது போட்டியிலும் தமிழ் தலைவாஸ் அணி தோல்வி அடைந்துள்ளது. தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியதன் மூலமாக ஹரியானா புள்ளிப்பட்டியலில் 5 வெற்றிகளுடன் 2ஆவது இடம் பிடித்துள்ளது. நாளை 27ஆம் தேதி சென்னையில் நடக்கும் கடைசி போட்டியில் தமிழ் தலைவாஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

IPL 2024: ரூ. 100 கோடிக்கு வாங்கப்பட்ட ஹர்திக் பாண்டியா? ஐபிஎல் நிர்வாகம் என்ன சொல்கிறது?

click me!