தோனிக்கு பாண்டியா கொடுத்த வித்தியாசமான பிறந்தநாள் பரிசு..!

First Published Jul 9, 2018, 1:25 PM IST
Highlights
hardik pandyas birthday gift to dhoni

தோனிக்கு ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா வித்தியாசமான பிறந்தநாள் பரிசு ஒன்றை கொடுத்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சீனியர் வீரருமான தோனி, கடந்த 7ம் தேதி 37வது பிறந்தநாளை கொண்டாடினார். இங்கிலாந்து தொடரில் ஆடிவரும் தோனிக்கு, இரண்டாவது டி20 போட்டி முடிந்த மறுநாள் பிறந்தநாள் என்பதால், கார்டிப் நகரில் பிறந்தநாள் கொண்டாடினார்.

தோனியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில், அவரது மனைவி, குழந்தை மற்றும் இந்திய வீரர்கள் கலந்துகொண்டனர். குடும்பத்தினர் மற்றும் வீரர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார் தோனி.

மேலும் சச்சின், சேவாக், ரெய்னா, கோலி உள்ளிட்ட வீரர்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்களின் வாயிலாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தோனிக்காக அவரது மகள் ஸிவா தோனி பாடிய பாடலும் வைரலானது.

இந்நிலையில், தோனிக்கு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கொடுத்த பிறந்தநாள் பரிசும் வைரலாகிவருகிறது. தோனிக்கு முடியை டிரிம் செய்துவிட்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஹர்திக் பாண்டியா, இதுதான் தோனிக்கு எனது பிறந்தநாள் பரிசு என பதிவிட்டுள்ளார்.

Special day calls for a special haircut. Here’s my birthday gift for the one and only @msdhoni . 💇‍♂✌ 😘

⚠ This stunts is performed by experts, don't try this at home ⚠😉😂 pic.twitter.com/F1TTwYlvoa
— hardik pandya (@hardikpandya7) 7 July 2018

கண்டிப்பாக இப்படியொரு பிறந்தநாள் பரிசை தோனிக்கு யாரும் கொடுத்திருக்க மாட்டார்கள்.

click me!