நீயா நானானு அடித்துக்கொள்ளும் புவனேஷ்வர் குமார் - பாண்டியா!!

By karthikeyan VFirst Published Aug 21, 2018, 4:04 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சரியாக ஆடாததால் கடும் விமர்சனத்துக்கு உள்ளான ஹர்திக் பாண்டியா, மூன்றாவது போட்டியில் சிறப்பாக ஆடி, தான் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் தான் என நிரூபித்துள்ளார். 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சரியாக ஆடாததால் கடும் விமர்சனத்துக்கு உள்ளான ஹர்திக் பாண்டியா, மூன்றாவது போட்டியில் சிறப்பாக ஆடி, தான் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் தான் என நிரூபித்துள்ளார். 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்தது. இந்த இரண்டு போட்டிகளிலுமே ஹர்திக் பாண்டியா, சொல்லும்படி ஆடவில்லை. முதல் போட்டியில் ஒரு விக்கெட் கூட பாண்டியா வீழ்த்தவில்லை. பேட்டிங்கிலும் பெரிதாக ஆடவில்லை. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால் பேட்டிங்கில் சோபிக்கவில்லை.

இந்தியாவிற்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு நல்ல ஆல்ரவுண்டர் கிடைத்து விட்டார் என நினைத்து கொண்டிருந்தவர்களுக்கு பாண்டியாவின் ஆட்டம் ஏமாற்றத்தை அளித்தது. பாண்டியா அணியில் ஆட தொடங்கிய புதிதில் பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்திலுமே அசத்தினார். இப்போதும் கூட ஃபீல்டிங் நன்றாக செய்கிறார். ஆனால் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சோபிப்பதில்லை. கபில் தேவுடன் ஒப்பிடப்பட்ட ஹர்திக் பாண்டியா, அண்மைக் காலங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார். 

ஆனால் தன் மீதான விமர்சனங்களுக்கு எல்லாம் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முற்றுப்புள்ளி வைத்தார் ஹர்திக் பாண்டியா. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸில் அந்த அணியின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி பேட்டிங் வரிசையை சரித்தார். 161 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்டாக மிக முக்கிய காரணம் ஹர்திக் பாண்டியாவின் பவுலிங் தான். வெறும் 6 ஓவர்களை வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார் பாண்டியா.

பவுலிங்கில் மிரட்டியது மட்டுமல்லாமல், பேட்டிங்கிலும் அசத்தினார். இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் அடித்த பாண்டியா, 52 பந்துகளுக்கு 52 ரன்கள் எடுத்தபோது, கேப்டன் விராட் கோலி இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தார். 

இந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் அரைசதமும் அடித்ததால், சிறந்த ஆல்ரவுண்டர்களின் பட்டியலில் இணைந்துள்ளார் ஹர்திக் பாண்டியா. இதற்கு முன்னதாக லாலா அமர்நாத், வினோ மன்கத், கபில் தேவ், புவனேஷ்வர் குமார்(2 முறை) ஆகியோர், ஒரே டெஸ்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு அரைசதமும் அடித்துள்ளனர். 

இந்த பட்டியலில் புவனேஷ்வர் குமார் இரண்டு முறை இடம்பிடித்துள்ளார். 2014ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் டிரெண்ட் பிரிட்ஜ் மற்றும் லார்ட்ஸ் ஆகிய இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் புவனேஷ்வர் குமார் பவுலிங்கில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதோடு, அரைசதமும் அடித்துள்ளார். 

ஹர்திக் பாண்டியா தான் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் என சித்தரிக்கப்படுகிறார். ஆனால் புவனேஷ்வர் குமாரும் தான் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் தான் என ஏற்கனவே நிரூபித்துள்ளார். 
 

click me!