கடைசி 2 பந்தை போடுறதுக்கு முன்னாடி விராட் கோலி பண்ண அலப்பறை இருக்கே!!

By karthikeyan VFirst Published Aug 21, 2018, 2:49 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், குக்கை அச்சுறுத்தும் விதமாக விராட் கோலியின் செயல்பாடு இருந்தது.

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், குக்கை அச்சுறுத்தும் விதமாக விராட் கோலியின் செயல்பாடு இருந்தது. 

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே அசத்தியதால் இந்திய அணி வெற்றியை நோக்கி பயணிக்கிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 329 ரன்களை குவித்தது. இங்கிலாந்து அணியோ வெறும் 161 ரன்களில் ஆல் அவுட்டானது. 

இதையடுத்து 168 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய 352 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 521 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி. மூன்றாம் நாள் ஆட்டம் முடிய 9 ஓவர்கள் இருந்த நிலையில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. 

9 ஓவர்கள் எஞ்சிய நிலையில், இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. குக்கும் ஜென்னிங்ஸும் களமிறங்கினர். இஷாந்த் சர்மாவும் பும்ராவும் மிரட்டலாக பந்துவீசினர். இவர்கள் வீசிய 7 ஓவர்களில் நூழிலையில் குக்கும் ஜென்னிங்ஸும் பலமுறை தப்பினர். இருவருமே சரியான லைனில் பந்துவீசினர். அஷ்வின் இரண்டு ஓவர்கள் வீசினார். 

இங்கிலாந்து அணியில் 5 பேட்ஸ்மேன்கள் என்பதால் அவர்களுக்கு வலது கை ஆஃப் ஸ்பின்னரான அஷ்வினால் அழுத்தம் கொடுக்கமுடியும். அதிலும் குறிப்பாக முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் குக்கை போல்டாக்கி அனுப்பினார் அஷ்வின். அதனால் அஷ்வினை வைத்து குக்கை வீழ்த்துவதற்காக அஷ்வினை இரண்டு ஓவர்கள் வீச அழைத்தார் கோலி.

ஆனால் குக் மற்றும் ஜென்னிங்ஸ் ஆகிய இருவருமே நிதானமாக கையாண்டனர். எனினும் அவர்களை எளிதாக விட்டுவிட கோலி விரும்பவில்லை. நேற்றைய ஆட்டத்தின் கடைசி ஓவரை அஷ்வின் வீசினார். ஆட்டம் முடிய இரண்டே பந்துகள் எஞ்சியிருந்த நிலையில், மேலும் ஒரு ஃபீல்டரை அருகில் நிற்கவைப்பதற்காக ஹெல்மெட் கேட்டார் விராட். அதை ராகுலிடம் கொடுத்து அருகில் நிறுத்தினார். நேற்றைய ஆட்டம் முடிய இரண்டே பந்துகள் இருந்த நிலையில், குக்கை அச்சுறுத்தும் விதமாக கோலி இதை செய்தார். எனினும் அந்த இரண்டு பந்துகளையும் நிதானமாக ஆடிவிட்டு சென்றார் குக். 
 

click me!