விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் அஜர்பைஜானில் உள்ள பாகு என்ற பகுதியில் செஸ் உலகக் கோப்பை நடந்தது. இதில், குகேஷ், அர்ஜூன் எரிகைசி, பிரக்ஞானந்தா, நிஹல் சரின், எஸ்.எல்.நாராயணன், அபிமன்யு புராணிக் என்று இந்தியா சார்பில் பலரும் போட்டியிட்டனர். எனினும், ஆர் பிரக்ஞானந்தா மட்டுமே இறுதிப் போட்டி வரை சென்று தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கத்துடன் நாடு திரும்பினார்.
இந்தியா, ஆஸ்திரேலியாவிற்கு உலகக் கோப்பையை கைப்பற்ற அதிக வாய்ப்புகள் இருக்கிறது – பாப் டூப்ளெசிஸ்!
இதில் காலிறுதிப் போட்டி வரை சென்ற குகேஷ் 2758 புள்ளிகளுடன் 8ஆவது இடம் பிடித்தார். ஒவ்வொரு மாதமும், சர்வதேச செஸ் சம்மேளனத்தின் (ஃபிடே) சார்பாக அதிகாரப்பூர்வ ரேட்டிங் பட்டியல் வெளியிடப்படும். இதில், கடந்த 37 ஆண்டுகளாக இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக விஸ்வநாதன் ஆனந்த் இருந்தார். இந்த நிலையில், தான் இன்று ரேட்டிங் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
டைமண்ட் லீக் தடகள போட்டி : ஈட்டி எறிதல் பிரிவில் நீரஜ் சோப்ரா 2ஆவது இடம்!
இதில், 17 வயதான தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலமாக 37 ஆண்டுகளாக நம்பர் 1 செஸ் வீரராக இருந்த விஸ்வநாதன் ஆனந்தின் சாதனை பயணம் முடிவுற்றது. குகேஷ் 2758 புள்ளிகளுடன் 8ஆவது இடம் பிடித்துள்ளார். விஸ்வநாதன் ஆனந்த் 2754 புள்ளிகளுடன் 9ஆவது இடத்திற்கு சென்றுள்ளார். செஸ் உலக கோப்பையில் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றிய பிரக்ஞானந்தா 2727 புள்ளிகளுடன் 19ஆவது இடத்தில் உள்ளார்.
ஷாஹீன் அஃப்ரிடி இருந்தால் என்ன, இந்திய அணியில் சிறந்த பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள் – சவுரவ் கங்குலி!