குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியானது, 12 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
புரோ கபடி லீக் தொடரின் 10ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் புனேரி பல்தான் ஆகிய இரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்து அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த இரு அணிகளைத் தொடர்ந்து தபாங் டெல்லி, ஹரியானா ஸ்டீலர்ஸ், பாட்னா பைரேட்ஸ் மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் ஆகிய 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
தெலுகு டைட்டன்ஸ் அணியானது புள்ளிப்பட்டியலில் 12ஆவது இடம் பிடித்து எலிமினேட்டாகியுள்ளது. இந்த அணிகள் தவிர, பெங்களுரூ புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், யு மும்பா மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் முறையே 7, 8, 9 மற்றும் 10 ஆகிய இடங்களில் உள்ளன. இனி வரும் போட்டிகளில் இந்த அணிகள் வெற்றி பெற்று, பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற சில அணிகள் அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வி அடைந்தால் பிளே ஆஃப் அணிகளில் மாற்றம் ஏற்படும்.
இந்திய அணியின் எதிர்காலமே யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில் தான் – வீரேந்திர சேவாக் பாராட்டு!
ஒரு அணியானது பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வேண்டுமானால், புள்ளிப்பட்டியலில் முதல் 6 இடங்களை பிடிக்க வேண்டும். தற்போது புள்ளிப்பட்டியலில் தமிழ் தலைவாஸ் அணியானது 40 புள்ளிகளுடன் 10ஆவது இடத்தில் உள்ளது. தமிழ் தலைவாஸ் அணிக்கு குஜராத் ஜெயிண்ட்ஸ், யு மும்பா, பெங்கால் வாரியர்ஸ் மற்றும் பெங்களூரு புல்ஸ் ஆகிய 4 அணிகளால் பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோக வாய்ப்பு இருந்தது.
அதன்படி நேற்றைய போட்டியில் நடந்துள்ளது. நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான 105ஆவது போட்டி நடந்தது. இதில், புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ள குஜராத் அணியானது ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. ஆனால், பிளே ஆஃப் வாய்ப்பு கிடைக்க கட்டாய வெற்றியை நோக்கி விளையாடிய தமிழ் தலைவாஸ் அணியானது கடைசி வரை போராடவே 30 புள்ளிகள் மட்டுமே பெற்றது. ஆனால், குஜராத் ஜெயிண்ட்ஸ் 42 புள்ளிகள் பெற்று 12 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.
இதன் மூலமாக தமிழ் தலைவாஸ் அணியானது 10ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இனிமேலும் பிளே ஆஃப் வாய்ப்பு கிடைப்பதில் சந்தேகம் தான்.
சுப்மன் கில்லின் சதம் – இங்கிலாந்துக்கு 399 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த டீம் இந்தியா!