மும்பையை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பெற்றது குஜராத்…

 
Published : Sep 21, 2017, 09:49 AM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
மும்பையை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பெற்றது குஜராத்…

சுருக்கம்

Gujarat defeated mumbai and got topped the point list

புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 52-வது லீக் ஆட்டத்தில் குஜராத் பார்ச்சூன் ஜெயன்ட்ஸ் அணி 45-23 என்ற புள்ளிகள் கணக்கில் யு-மும்பா அணியை வீழ்த்தியது.

புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 52-வது லீக் ஆட்டம் மும்பையில் நடைபெற வேண்டியது. மழை காரணமாக ஒத்தி ராஞ்சியில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே அபாரமாக ஆடிய குஜராத் அணி முதல் பாதி ஆட்டநேர முடிவில் 24-12 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலைப் பெற்றது.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்திலும் தொடர்ந்து அசத்தலாக ஆடி குஜராத் அணி 45-23 என்ற கணக்கில் யு-மும்பாவை அதிரடியாக வீழ்த்தியது.

குஜராத் தரப்பில் அதன் ரைடர்கள் சந்திரன் ரஞ்சித் 11 புள்ளிகளையும், சச்சின் 10 புள்ளிகளையும் கைப்பற்றினர்.

யு-மும்பா தரப்பில் அதன் கேப்டன் அனுப் குமார் 7 புள்ளிகளைக் கைப்பற்றினார்.

இதுவரை 15 ஆட்டங்களில் விளையாடியுள்ள குஜராத் அணி 9-வது வெற்றியைப் பெற்று 56 புள்ளிகளுடன் 'ஏ' பிரிவில் முதலிடத்தில் உள்ளது.

அதேநேரத்தில் யு-மும்பா அணி 15 ஆட்டங்களில் விளையாடி 8-வது தோல்வியைச் சந்தித்து 39 புள்ளிகளுடன் 'ஏ' பிரிவில் 4-வது இடத்தில் உள்ளது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஹர்திக் மரண அடி.. பும்ரா மேஜிக் பவுலிங்.. SA-வை கதறவிட்ட இந்தியா.. T20 தொடரை வென்று அசத்தல்!
அபிஷேக் சர்மா சாதனையை சல்லி சல்லியாக நொறுக்கிய ஹர்திக் பாண்ட்யா..! மின்னல் வேக அரை சதம்!