
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் காலித் லத்தீஃபுக்கு ஐந்தாண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டு உள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதால் காலித் லத்தீஃபுக்கு ஐந்தாண்டுகள் விளையாட தடை விதித்து ஓய்வுப் பெற்ற நீதிபதி ஹைதர் தலைமையிலான மூன்று பேர் அடங்கிய தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தீர்ப்பாயத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
“பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் காலித் லத்தீஃப் 5 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர அவருக்கு ரூ.10 இலட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அபராதத் தொகையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் காலித் லத்தீஃப் அளிக்க வேண்டும்” என்றுக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.