இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஆட்டம் இன்று; பதிலடி கொடுக்குமா ஆஸ்திரேலியா?

 
Published : Sep 21, 2017, 09:37 AM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஆட்டம் இன்று; பதிலடி கொடுக்குமா ஆஸ்திரேலியா?

சுருக்கம்

The 2nd game between India and Australia today Will Australia Retaliate?

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் கொல்கத்தாவில் இன்று நடைபெறுகிறது.

சென்னையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதன் மூலம் இந்தத் தொடரை உற்சாகத்தோடு தொடங்கும் இந்திய அணி.

2-வது ஆட்டத்திலாவது வெற்றியைப் பெற வேண்டும் என்ற முனைப்போடு களமிறங்கும் ஆஸ்திரேலியா.

இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹான ஆகியோர் களம் காணுவர்.

கடந்த ஆட்டத்தில் சொற்ப ஓடங்களில் வெளியேறிய ரோஹித்தும், ரஹானேவும் இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆட வேண்டியது கட்டாயம்.

மிடில் ஆர்டரைப் பொறுத்தவரையில் கேப்டன் கோலி பலமாக திகழ்கிறார். கடந்த ஆட்டத்தில் டக் அவுட்டான அவர், இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு பதிலடி கொடுத்தே ஆகணும்,

4-வது பேட்ஸ்மேன் இடத்தில் களமிறங்கிய மணீஷ் பாண்டே, கடந்த ஆட்டத்தில் 2 பந்துகளில் ஔட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். எனவே அவருக்குப் பதிலாக இந்த ஆட்டத்தில் கே.எல்.ராகுல் இடம்பெறலாம்.

இதுதவிர கேதார் ஜாதவ், விக்கெட் கீப்பர் தோனி, ஹார்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார் ஆகியோரும் பேட்டிங்கில் கூடுதல் பலம் சேர்க்கின்றனர்.

கடந்த ஆட்டத்தில் இந்தியா 87 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, தோனியும், பாண்டியாவும் அசத்தலாக ஆடி அணியைச் சரிவிலிருந்து மீட்டனர்.

வேகப்பந்து வீச்சில் புவனேஸ்வர் குமார் - ஜஸ்பிரீத் பூம்ரா கூட்டணி சிறப்பாக பந்துவீசி வருகிறது. சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் குல்தீப் யாதவ் - யுவேந்திர சாஹல் கூட்டணி பலம் சேர்க்கிறது.

ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரையில் கடந்த ஆட்டத்தில் தொடக்க வீரராக களமிறங்கிய ஹில்டன் கார்ட்ரைட் இந்த ஆட்டத்தில் விளையாடமாட்டார். அதனால் டேவிட் வார்னரும், டிராவிஸ் ஹெட்டும் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள்.

டிராவிஸ் ஹெட் 4-வது வீரராக களமிறங்கி வந்தார். அவர் தொடக்க வீரராக களமிறங்குகிறபோது, 4-வது பேட்ஸ்மேன் இடத்தில் பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் களமிறங்குவார்.

டேவிட் வார்னர், கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், கிளன் மேக்ஸ்வெல் ஆகியோரின் ஆட்டத்தைப் பொறுத்தே ஆஸ்திரேலியாவின் ஓட்டங்கள் குவிப்பு அமையும்.

கடந்த ஆட்டத்தில் முக்கியமான கட்டத்தில் சிக்ஸர்களை விளாசி மிரட்டிய மேக்ஸ்வெலின் அதிரடி, இந்த ஆட்டத்திலும் தொடரும்.

பின்வரிசை பேட்டிங்கில் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட், ஆல்ரவுண்டர்கள் மார்கஸ் ஸ்டோனிஸ், ஜேம்ஸ் ஃபாக்னர் ஆகியோர் கூடுதல் பலம் சேர்க்கின்றனர்.

வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் பேட் கம்மின்ஸ், நாதன் கோல்ட்டர் நீல் கூட்டணி ஆஸ்திரேலியாவுக்கு பலம் சேர்க்கிறது. கடந்த ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன்களை விரைவாக வீழ்த்திய கம்மின்ஸ் - கோல்ட்டர் நீல் கூட்டணி இந்த ஆட்டத்திலும் அபாரமாக பந்துவீசும்.

இதுதவிர ஃபாக்னர், ஸ்டோனிஸ் ஆகியோரும் ஆஸ்திரேலியாவுக்கு பலம் சேர்க்கின்றனர். சுழற்பந்து வீச்சில் ஆடம் ஸம்பாவை நம்பியுள்ளது ஆஸ்திரேலியா.

இந்தியா (உத்தேச லெவன்) அணியின் விவரம்:

ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானே, விராட் கோலி (கேப்டன்), மணீஷ் பாண்டே/கே.எல்.ராகுல், கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி, ஹார்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், ஜஸ்பிரித் பூம்ரா.

ஆஸ்திரேலியா (உத்தேச லெவன்) அணியின் விவரம்:

டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், கிளன் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), ஜேம்ஸ் ஃபாக்னர், நாதன் கோல்ட்டர் நீல், பேட் கம்மின்ஸ், ஆடம் ஸம்பா. 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

U19 ஆசிய கோப்பையை தட்டித் தூக்கியது பாகிஸ்தான்! 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி!
அலெக்ஸ் கேரியின் அசுர ஆட்டம்.. நிலைகுலைந்த இங்கிலாந்து.. ஆஷஸ் தொடரை வென்று ஆஸி., அசத்தல்!