குளோபல் இந்தியப் பிரவாசி கபாடி: இறுதிப் போட்டியில் தமிழ் லயன்ஸ் மற்றும் மராத்தி வால்கர்ஸ்!

Rsiva kumar   | ANI
Published : Apr 29, 2025, 06:42 PM IST
குளோபல் இந்தியப் பிரவாசி கபாடி: இறுதிப் போட்டியில் தமிழ் லயன்ஸ் மற்றும் மராத்தி வால்கர்ஸ்!

சுருக்கம்

Marathi Vultures vs Tamil Lions GIPKL 2025 Final : குருகிராமில் நடைபெற்று வரும் குளோபல் இந்தியப் பிரவாசி கபாடி லீக்கில் (GI-PKL) ஆண்கள் பிரிவு இறுதிப் போட்டிக்கு மராத்தி வால்கர்ஸ் மற்றும் தமிழ் லயன்ஸ் அணிகள் முன்னேறியுள்ளன.

Marathi Vultures vs Tamil Lions GIPKL 2025 Final : குருகிராம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் குளோபல் இந்தியப் பிரவாசி கபாடி லீக்கின் (GI-PKL) ஆண்கள் பிரிவு இறுதிப் போட்டிக்கு மராத்தி வால்கர்ஸ் மற்றும் தமிழ் லயன்ஸ் அணிகள் முன்னேறியுள்ளன. முதல் அரையிறுதியில் மராத்தி வால்கர்ஸ் அணி பஞ்சாபி டைகர்ஸ் அணியை 38-36 என்ற கணக்கில் வீழ்த்தியது. இதே போன்று 2ஆவது அரையிறுதியில் தமிழ் லயன்ஸ் அணி பீகார் லெப்பர்ட்ஸ் அணியை 50-27 என்ற கணக்கில் வீழ்த்தியது.

14 வயதில் சதம்! பேட்டிங், கடின பயிற்சி குறித்து மனம் திறந்து பேசிய வைபவ் சூர்யவன்ஷி!

இதைத் தொடர்ந்து நாளை ஏப்ரல் 30 அன்று நடைபெறும் குளோபல் இந்தியப் பிரவாசி கபாடி லீக் (GI-PKL) இறுதிப் போட்டியில் மராத்தி வால்கர்ஸ் அணியும் தமிழ் லயன்ஸ் அணியும் மோதுகின்றன. திங்கட்கிழமை நடைபெற்ற முதல் அரையிறுதியில், பஞ்சாபி டைகர்ஸ் அணியை 38-36 என்ற கணக்கில் வீழ்த்தி மராத்தி வால்கர்ஸ் அணி வெற்றி பெற்றது. இரண்டு அணிகளும் சமபலம் கொண்டவையாக இருந்தன, ஆனால் முக்கியமான தருணங்களில் வால்கர்ஸ் அணி சிறப்பாக செயல்பட்டது.

14 வயதில் சதம் அடித்து வரலாறு படைத்த பாலகன்! யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி?

பஞ்சாபி டைகர்ஸ் அணி 4 சூப்பர் டேக்கிள்களை எடுத்த போதிலும், மராத்தி வால்கர்ஸ் அணி அழுத்தத்தின் கீழ் அமைதியாக விளையாடி வெற்றி பெற்றது. இரண்டாவது அரையிறுதியில், தமிழ் லயன்ஸ் அணி பீகார் லெப்பர்ட்ஸ் அணியை 50-27 என்ற கணக்கில் வீழ்த்தியது. லயன்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 25 ரெய்டு புள்ளிகள், 18 டேக்கிள் புள்ளிகள் மற்றும் பல ஆல்-அவுட்களை எடுத்து, லெப்பர்ட்ஸ் அணியை தொடர்ந்து அழுத்தத்தில் வைத்திருந்தது. லெப்பர்ட்ஸ் அணி மூன்று சூப்பர் டேக்கிள்களை எடுத்த போதிலும், தமிழக லயன்ஸ் அணியின் அபார ஆட்டத்தால் அவர்கள் தோல்வியைத் தழுவினர்.

இளம் வயதில் சதம் அடித்த முதல் வீரர் வைபவ் சூர்யவன்ஷி – 14 வயதில் 11 சிக்ஸருடன் 101 ரன்கள்!

பெண்கள் பிரிவில், தமிழ் லயனஸ், பஞ்சாபி டைகிரஸ், தெலுங்கு சீட்டாஸ் மற்றும் பீகார் லெப்பர்டஸ் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. பெண்கள் அரையிறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் முதல் அரையிறுதிப் போட்டியில் தமிழ் லயனஸ் அணியும், போஜ்புரி லெப்பர்ட்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில் பஞ்சாபி டைகிரஸ் அணியும், தெலுங்கு சீட்டாஸ் அணியும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணிகள் நாளை 30 ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது. DD Sports மற்றும் Waves OTT-யில் நேரலையாக கபாடி போட்டிகளைக் காணலாம். Sony Sports 3 மற்றும் FanCode-லும் மாலை 7:00 மணி முதல் நேரலையாகப் போட்டிகளைக் காணலாம்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

IPL Auction 2026: சிஎஸ்கே வாங்கிய வீரர்கள் யார்? யார்? CSK அணி வீரர்கள் முழு பட்டியல் இதோ!
IPL Auction 2026: விலை போன வீரர்கள் யார்? யார்? விலை போகாத வீரர்கள் யார்? யார்? முழு லிஸ்ட் இதோ!