இதுதான் ஆரோக்கியமான விஷயம்!! ஆண்டர்சனை வாழ்த்திய மெக்ராத்

By karthikeyan VFirst Published Sep 12, 2018, 1:41 PM IST
Highlights

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற தனது சாதனையை முறியடித்துள்ள ஆண்டர்சனுக்கு, கிளென் மெக்ராத் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற தனது சாதனையை முறியடித்துள்ள ஆண்டர்சனுக்கு, கிளென் மெக்ராத் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-1 என வென்றது. இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை ஜேம்ஸ் ஆண்டர்சன் தான் வீழ்த்தினார். இந்த தொடரில் மட்டும் 24 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

கடைசி போட்டியில் கடைசி விக்கெட்டான ஷமியை வீழ்த்தியதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார். ஷமியின் விக்கெட் ஆண்டர்சன் வீழ்த்திய 564வது விக்கெட். இதன்மூலம் மெக்ராத்தின் சாதனையை ஆண்டர்சன் முறியடித்தார்.

36 வயதான ஆண்டர்சன், 143 போட்டிகளில் 564 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத் 124 போட்டிகளில் ஆடி 563 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 564 விக்கெட்டுகளை வீழ்த்தி மெக்ராத்தை பின்னுக்கு தள்ளிய ஆண்டர்சனுக்கு மெக்ராத் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆண்டர்சனுக்குவ் வாழ்த்து தெரிவித்து மெக்ராத் டூவிட் செய்துள்ளார். மேலும் பிபிசி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ஆண்டர்சன் என்னை முந்திவிட்டார். அவர் இன்னும் ஃபிட்டாகத்தான் உள்ளார். அடுத்ததாக என்ன செய்ய நினைக்கிறார் என்பது அவரை பொறுத்தது. எனினும் அடுத்த இலக்கு 600 விக்கெட்டுகளை வீழ்த்துவதாகத்தான் இருக்கும். அதை மட்டும் அவர் செய்துவிட்டால், அது மிகப்பெரிய சாதனையாகும் என மெக்ராத் தெரிவித்துள்ளார். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முரளிதரன், வார்னே, கும்ப்ளேவிற்கு அடுத்து நான்காவது இடத்தை பிடித்துள்ளார் ஆண்டர்சன். 
 

click me!