ரோஹித் சர்மாவை அந்த இடத்துல இறக்குனீங்கன்னா ஆஸ்திரேலியாவை அதகளம் பண்ணிடுவாரு!! கோலிக்கு கங்குலியின் அறிவுரை

By karthikeyan VFirst Published Nov 15, 2018, 1:05 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மாவை எந்த வரிசையில் இறக்க வேண்டும் என்று கேப்டன் கோலிக்கு முன்னாள் கேப்டன் கங்குலி ஆலோசனை வழங்கியுள்ளார்.
 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மாவை எந்த வரிசையில் இறக்க வேண்டும் என்று கேப்டன் கோலிக்கு முன்னாள் கேப்டன் கங்குலி ஆலோசனை வழங்கியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐசிசி தரவரிசை பட்டியலில் நம்பர் 1 அணியாக இருந்தும், தொடர்ச்சியாக வெளிநாடுகளில் இந்திய அணி தோல்வியை சந்தித்துவருகிறது. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் டெஸ்ட் தொடர்களை இழந்துள்ளது. 

எனவே ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு மிக முக்கியமான ஒன்று. வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்துவிட்ட நிலையில், இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அடுத்த மாதம் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. 

4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பந்து நன்றாக பவுன்ஸாகும் என்பதால் பவுன்ஸரை சிறப்பாக ஆடக்கூடிய ரோஹித் சர்மா, மீண்டும் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

அதேபோல இங்கிலாந்து தொடரில் பாதியில் அணியிலிருந்து நீக்கப்பட்ட முரளி விஜயும் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பிரித்வி ஷா மற்றும் ராகுலும் அணியில் உள்ளனர். பிரித்வி ஷா, முரளி விஜய், ராகுல் ஆகிய மூவரில் இருவர் தொடக்க வீரர்களாக கமிறங்குவர் என்பதால் ரோஹித் கண்டிப்பாக தொடக்க வீரராக களமிறக்கப்பட மாட்டார். 

இந்நிலையில் ரோஹித் சர்மா ஆடும் லெவனில் இடம்பெறுவாரா என்ற கேள்வியும் எழுகிறது. ரோஹித் சர்மா கண்டிப்பாக ஆடும் லெவனில் இடம்பெற வேண்டும் என்பதே சேவாக், கங்குலி ஆகியோரின் கருத்தாக உள்ளது. ரோஹித் சர்மா கண்டிப்பாக ஆடும் லெவனில் இடம்பெற வேண்டும். ஆனால் அவரை தொடக்க வீரராக களமிறக்க தேவையில்லை என்று சேவாக் கூறியிருந்தார். ஆனால் ரோஹித்தை எந்த வரிசையில் இறக்குவது சிறந்தது என்பது குறித்து சேவாக் எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை. 

இந்நிலையில், ரோஹித்தின் பொசிசன் குறித்து பேசிய கங்குலி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மாவை 6ம் வரிசையில் களமிறக்கலாம். ரோஹித் சர்மா அந்த இடத்தில் சிறப்பாக ஆடுவார் என்றும் ரோஹித் சர்மா மாதிரியான ஒரு வீரரை பென்ச்சில் உட்கார வைத்துவிடாமல் அவரை அணியில் சேர்த்து 6ம் வரிசையில் களமிறக்க வேண்டும் என்றும் கங்குலி தெரிவித்துள்ளார். 

முரளி விஜய், ராகுல், பிரித்வி ஷா ஆகிய மூவரில் இருவர் தொடக்க வீரர்கள். மூன்றாவது வீரர் புஜாரா, நான்காம் வரிசையில் கோலி, ஐந்தாவது வீரர் ரஹானே. இவர்களுக்கு அடுத்து ரோஹித்தை இறக்க வேண்டும் என்பது கங்குலியின் கருத்து. கங்குலியின் ஆலோசனைக்கு கோலி செவிமடுக்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 

click me!