வாய்க்கு வந்ததை எல்லாம்ல அந்த ஆளு பேசுறாரு!! சாஸ்திரியின் மூக்கை உடைத்த ஸ்டீவ் வாக்

By karthikeyan VFirst Published Nov 15, 2018, 12:18 PM IST
Highlights

விராட் கோலி தலைமையிலான தற்போதைய இந்திய அணிதான், இதுவரை இருந்த மற்ற இந்திய அணிகளை காட்டிலும் மிகச்சிறந்த டிராவலிங் அணி என்ற ரவி சாஸ்திரியின் கருத்துக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் பதிலடி கொடுத்துள்ளார். 
 

விராட் கோலி தலைமையிலான தற்போதைய இந்திய அணிதான், இதுவரை இருந்த மற்ற இந்திய அணிகளை காட்டிலும் மிகச்சிறந்த டிராவலிங் அணி என்ற ரவி சாஸ்திரியின் கருத்துக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் பதிலடி கொடுத்துள்ளார். 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. நம்பர் 1 டெஸ்ட் அணியாக இருந்தாலும், இந்திய மண்ணில் மட்டுமே ஜொலிக்கும் இந்திய அணி, வெளிநாடுகளில் தொடர்ந்து மண்ணை கவ்விவருகிறது. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து என தொடர்ச்சியாக வெளிநாட்டு தொடர்களில் தோல்விகளை தழுவிவருகிறது. 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்த தருணத்தில் கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை மாற்ற வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலித்தன. 

அதனால் அந்த நேரத்தில் விரக்தியில் இருந்த ரவி சாஸ்திரி, விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் தங்களது கெத்தை விட்டுக்கொடுக்காமல் இருப்பதற்காகவும் அதிரடியாக ஒரு கருத்தை தெரிவித்தார். அதாவது கடந்த 20 ஆண்டுகளில் விராட் கோலி தலைமையிலான தற்போதைய இந்திய அணிதான் உலகின் மிகச்சிறந்த டிராவலிங் அணி என்றார். மிகைப்படுத்தப்பட்ட இந்த கருத்தை முன்னாள் ஜாம்பவான்கள் பலரும் கண்டித்தனர். 

ரவி சாஸ்திரியின் இந்த கருத்துக்கு கவாஸ்கர், கங்குலி, சேவாக் உள்ளிட்ட பல வீரர்கள் எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தெரிவித்தனர். கங்குலி மற்றும் டிராவிட் தலைமையிலான இந்திய அணி வெளிநாடுகளில் பல டெஸ்ட் தொடர்களை வென்றதை சுட்டிக்காட்டி சாஸ்திரிக்கு பதிலடி கொடுத்தனர். 

ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் செய்ய உள்ள நிலையில், சாஸ்திரியின் இந்த கருத்து குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக், விராட் கோலி தலைமையிலான இந்திய அணிதான் சிறந்த டிராவலிங் அணி என்று நான் நினைக்கவில்லை. நான் ஆடிய காலத்தில் இருந்த இந்திய அணி மிகச்சிறந்த அணியாக இருந்தது. சிறந்த வீரர்களை கொண்ட இந்திய அணிக்கு எதிராக நான் ஆடியுள்ளேன். அவர்கள் எல்லாருமே சிறந்த வீரர்கள். தற்போதைய அணிதான் சிறந்த அணி என்று அவர் நம்புவதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் பொதுவெளியில் இப்படியொரு கருத்தை தெரிவிக்காமல் அதை அவர் மனசுக்குள் வேண்டுமானால் வைத்திருந்திருக்கலாம் என்று காட்டமாக ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார். 
 

click me!