கோலியும் ரோஹித்தும் இல்லைனா எப்படியோ அப்படித்தான்!! தெறிக்கவிட்ட தாதா

By karthikeyan VFirst Published Nov 15, 2018, 11:13 AM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்து அதிரடியாக கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்து அதிரடியாக கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐசிசி தரவரிசை பட்டியலில் நம்பர் 1 அணியாக இருந்தும், தொடர்ச்சியாக வெளிநாடுகளில் இந்திய அணி தோல்வியை சந்தித்துவருகிறது. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் டெஸ்ட் தொடர்களை இழந்துள்ளது. 

எனவே ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு மிக முக்கியமான ஒன்று. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய அணி வெல்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

பேட்டிங், பவுலிங் என அனைத்திலுமே இந்திய அணி வலுவாக உள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணி ஸ்மித் மற்றும் வார்னர் ஆகிய நட்சத்திர வீரர்கள் இல்லாமல் தவித்துவருகிறது. பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித்தும் வார்னரும் தடையில் இருப்பதால் அவர்கள் இல்லாமல் அந்த அணி தொடர் தோல்விகளை சந்தித்துவருகிறது. 

ஸ்மித்தும் வார்னரும் ஆஸ்திரேலிய அணியில் இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பலமாக அமையும். அதேநேரத்தில் தொடர் தோல்விகளிலிருந்து மீளும் விதமாகவும் இந்தியாவுக்கு சவால் விடுக்கும் விதமாகவும் ஸ்மித் மற்றும் வார்னர் மீதான தடையை திரும்ப பெறுவது குறித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பரிசீலித்துவருவதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், ஆஸ்திரேலிய தொடர் குறித்து பேசிய முன்னாள் கேப்டன் கங்குலி, ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித்தும் வார்னரும் இல்லாதது இந்திய அணியில் கோலியும் ரோஹித்தும் இல்லாததற்கு சமம். ஸ்மித்தும் வார்னரும் இல்லாதது ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியை வீழ்த்துவதற்கு நமக்கு நல்ல வாய்ப்பாகும். இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டுமே சிறப்பாக இருக்கிறது. இங்கிலாந்தில் ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும் 20 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள் இந்திய பவுலர்கள். எனவே ஆஸ்திரேலியாவிலும் இந்தியாவின் பவுலிங் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறோம். ஸ்மித்தும் வார்னரும் இல்லாதது நமக்கும் பலம்தான் என்றாலும் அவர்கள் இல்லாத ஆஸ்திரேலிய அணியை வலுவிழந்த அணியாக கருதவில்லை என்று கங்குலி தெரிவித்தார். 
 

click me!