ஐபிஎல் 2019: சென்னை சூப்பர் கிங்ஸ் கழட்டிவிட்ட 3 வீரர்கள்

By karthikeyan VFirst Published Nov 15, 2018, 10:17 AM IST
Highlights

கடந்த 2008ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரில் இதுவரை 11 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. 12வது சீசன் அடுத்த ஆண்டு நடக்க உள்ளது. 
 

கடந்த 2008ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரில் இதுவரை 11 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. 12வது சீசன் அடுத்த ஆண்டு நடக்க உள்ளது. 

ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளும்தான் ஆதிக்கம் செலுத்திவருகின்றன. இந்த இரு அணிகள் தான் வெற்றிகரமான அணிகளாகத் திகழ்கின்றன. சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளுமே தலா 3 முறை கோப்பையை வென்றுள்ளன. 

இரண்டு ஆண்டுகால தடைக்கு பிறகு மீண்டும் தோனியின் தலைமையில் 2017ம் ஆண்டு களமிறங்கிய சென்னை அணி கோப்பையை வென்று கெத்தாக ரீ எண்ட்ரி கொடுத்தது.

இந்நிலையில், அடுத்த ஆண்டு மே மாத இறுதியில் உலக கோப்பை தொடங்க இருப்பதால், ஐபிஎல் சீசன் வழக்கத்தைவிட முன்னதாகவே தொடங்கப்பட உள்ளது. அதனால் வழக்கமாக ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் நடக்கும் வீரர்கள் ஏலம் இம்முறை டிசம்பர் மாதம் கோவாவில் நடக்க உள்ளது. 

அதனால் அதற்கு முன்னதாக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்க விரும்பாத வீரர்களின் பட்டியலை சமர்ப்பிக்குமாறு கேட்டிருந்தது. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 25 பேர் கொண்ட அணியிலிருந்து 3 வீரர்களை விடுவித்துள்ளது. மார்க் வூட், கனிஷ்க் சேத், ஹிதிஸ் சர்மா ஆகிய மூவரையும் சென்னை அணி விடுவித்துள்ளது. இந்த 3 வீரர்களையும் சென்னை அணி விடுவித்ததால் ரூ.8.5 கோடி கையிருப்பு உள்ளது. அந்த தொகைக்கு மற்ற வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம். 

3 வீரர்கள் விடுவிக்கப்பட்டதற்கு பிறகு சிஎஸ்கே அணி:

தோனி(கேப்டன்), ரெய்னா, ஜடேஜா, கேதர் ஜாதவ், ஹர்பஜன் சிங், ஷேன் வாட்சன், அம்பாதி ராயுடு, டேவிட் வில்லி, டுவைன் பிராவோ, ஷர்துல் தாகூர், முரளி விஜய், டுபிளெசிஸ், சாம் பில்லிங்ஸ், இம்ரான் தாஹிர், தீபக் சாஹர், லுங்கி நிகிடி, ஆசிஃப், ஜெகதீஸன், மோனு சிங், துருப் ஷோரே, பிஷ்னோய், கரண் சர்மா. 
 

click me!