தினேஷ் கார்த்திக் பேட்டில் பந்தே படல.. அணியில் அவர் எதற்கு..? தினேஷை தூக்கிட்டு அந்த பையனை சேருங்க!! கங்குலி அதிரடி

By karthikeyan VFirst Published Aug 13, 2018, 11:27 AM IST
Highlights

தினேஷ் கார்த்திக் ஃபார்ம் இல்லாமல் தவிப்பதால், அடுத்துவரும் போட்டிகளில் அவரை நீக்கிவிட்டு இளம் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட்டை அணியில் சேர்க்குமாறு கங்குலி ஆலோசனை கூறியுள்ளார். 

தினேஷ் கார்த்திக் ஃபார்ம் இல்லாமல் தவிப்பதால், அடுத்துவரும் போட்டிகளில் அவரை நீக்கிவிட்டு இளம் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட்டை அணியில் சேர்க்குமாறு கங்குலி ஆலோசனை கூறியுள்ளார். 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. முதல் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்திலும் இரண்டாவது போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்திலும் தோல்வியடைந்தது. இரண்டு போட்டிகளிலுமே இந்திய வீரர்களின் பேட்டிங் படுமோசமாக இருந்தது. 

பேட்டிங்கில் சோபிக்காததுதான் தோல்விகளுக்கு முக்கிய காரணம். அதிலும் லார்ட்ஸில் நடந்த இரண்டாவது போட்டியில் பேட்டிங்கில் இந்திய அணி மோசமாக சொதப்பியது. இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்தே 237 ரன்கள் மட்டுமே இந்திய அணி எடுத்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு கிடைத்த வாய்ப்பை தினேஷ் கார்த்திக் பயன்படுத்தி கொள்ளவில்லை. இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் ஒரு ரன் எடுத்த தினேஷ் கார்த்திக், இரண்டாவது இன்னிங்ஸில் டக் அவுட்டானார். இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து வெறும் 4 பந்துகளை மட்டுமே தினேஷ் கார்த்திக் எதிர்கொண்டார். 

வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான லார்ட்ஸில் நடக்கும் போட்டிக்கு உமேஷ் யாதவை நீக்கிவிட்டு ஸ்பின் பவுலர் குல்தீப் யாதவை சேர்த்ததும் விமர்சனத்துக்கு உள்ளானது. 

இந்நிலையில், இந்திய அணி தேர்வு குறித்து பேசிய கங்குலி, இந்திய பேட்ஸ்மேன்கள் அவுட்டானது குறித்து என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. பேட்டிங்கில் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு எப்படி தீர்வு காணப்போகிறார்கள் என்று தெரியவில்லை. இன்னும் மூன்று போட்டிகள் உள்ளன. மிஞ்சி போனால் ஷிகர் தவானை மீண்டும் அணியில் சேர்ப்பார்கள்; புஜாராவுடன் பேசுவார்கள். புஜாரா மட்டும்தான் 70 பந்துகளை எதிர்கொண்டார். ஆனால் ரன் அடிக்காமல் வெறுமனே களத்தில் நிற்பதும் பயனற்றது. ரன்கள் எடுத்தால்தான் மற்ற வீரர்களுக்கும் ஊக்கமாக அமையும்.

தினேஷ் கார்த்திக் சுத்தமாக ஃபார்மே இல்லாமல் தவித்து வருகிறார். வலைப்பயிற்சியில் அவர் பேட்டிங் செய்ததை பார்த்தேன். பயிற்சியில் கூட அவரால் பந்தை அடிக்க முடியவில்லை. எனவே அடுத்த போட்டிகளில் அவரை நீக்கிவிட்டு ரிஷப் பண்ட்டை சேர்க்கலாம். இடது கை பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட், சிறந்த வீரர். இந்திய அணியின் தோல்விகள் அவரை கண்டிப்பாக பாதித்திருக்காது என நினைக்கிறேன். போட்டியை மாற்றக்கூடிய வீரராக அவர் இருப்பார் என கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். 
 

click me!