வீரர்களின் தோள் மீது கைபோட்டு பேசுங்க கோலி!! அதுக்கு அப்புறம் பாருங்க அவங்க எப்படி ஆடுறாங்கனு..? கங்குலி அறிவுரை

By karthikeyan VFirst Published Sep 14, 2018, 5:55 PM IST
Highlights

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அறிவுரை வழங்கியுள்ளார். 
 

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அறிவுரை வழங்கியுள்ளார். 

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4-1 என இந்திய அணி இழந்தது. இந்த தொடரை இழந்ததன் எதிரொலியாக கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து என இந்திய அணி தொடர்ச்சியாக வெளிநாடுகளில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. கேப்டன் கோலியின் கள வியூகம், வீரர்களை பயன்படுத்தும் விதம், பவுலிங் சுழற்சி, வீரர்களுடனான அணுகுமுறை ஆகியவை கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளன. 

இந்நிலையில், ஏற்கனவே கேப்டன் கோலிக்கு கேப்டன்சி குறித்த பல அறிவுரைகளை வழங்கியுள்ள கங்குலி தற்போதும் அப்படியான அறிவுரைகளை வழங்கியுள்ளார். இதுதொடர்பாக பேசிய கங்குலி, திறமையான வீரர்களை அங்கீகரிக்க வேண்டும். இந்திய அணியில் புஜாரா, ராகுல், ரஹானே போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். அவர்களிடமிருந்து சிறந்த ஆட்டத்தை கேப்டன் கோலி தான் வெளிக்கொண்டு வர வேண்டியது கேப்டன் கோலியின் கடமை. 

வீரர்களின் தோள் மீது கைபோட்டு, அவர்கள் போட்டியை வென்றுதர வேண்டும் என கேப்டன் கேட்டால், வீரர்களுக்கு கூடுதல் பொறுப்புணர்வு வரும். அதன்மூலம் அவர்களிடமிருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டுவர முடியும். அவர்களின் ஆட்டத்திறனும் மேம்படும். ஆனால் திறமைகளை கண்டறிவதுதான் முக்கியம் என கங்குலி அறிவுறுத்தியுள்ளார். 

click me!