தம்பிங்களா.. இதுவரை நீங்க செஞ்சதுலாம் சம்பவமே கிடையாது.. இதுல தெரிஞ்சுடும் உங்க திறமை!! இளம் வீரர்களை தெறிக்கவிடும் சேவாக்

By karthikeyan VFirst Published Sep 14, 2018, 5:09 PM IST
Highlights

ஆசிய கோப்பையில் தான் இந்திய அணியின் ஸ்பின்னர்களான குல்தீப் மற்றும் சாஹலின் திறமை தெரியவரும் என முன்னாள் வீரர் சேவாக் கருத்து தெரிவித்துள்ளார். 
 

ஆசிய கோப்பையில் தான் இந்திய அணியின் ஸ்பின்னர்களான குல்தீப் மற்றும் சாஹலின் திறமை தெரியவரும் என முன்னாள் வீரர் சேவாக் கருத்து தெரிவித்துள்ளார். 

இந்திய அணியின் அஷ்வின் மற்றும் ஜடேஜாவிற்கு பதிலாக குல்தீப் மற்றும் சாஹல் ஆகிய இரண்டு ஸ்பின்னர்களும் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் நிரந்தர இடம் பிடித்துள்ளனர். கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்திய ஒருநாள் அணியில் அஷ்வினும் ஜடேஜாவும் ஆடவில்லை.

குல்தீப் மற்றும் சாஹல் சிறப்பாக பந்துவீசியதால்தான் அஷ்வின் மற்றும் ஜடேஜாவிற்கு மீண்டும் அணியில் இடம்கிடைக்கவில்லை. குல்தீப் - சாஹல் சுழல் ஜோடி, இந்தியாவிற்கு வெளியே தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் நன்றாக பந்துவீசியுள்ளனர். தென்னாப்பிரிக்காவில் நடந்த அந்நாட்டுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 5-1 என வெல்ல குல்தீப் - சாஹல் ஸ்பின் ஜோடிதான் முக்கிய காரணமாக திகழ்ந்தது. இவர்கள் இருவரும் இணைந்து தென்னாப்பிரிக்க பேட்டிங் வரிசையை சரித்தனர்.

கடந்த ஓராண்டாகவே இருவரும் அசத்திவருகின்றனர். இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நாளை தொடங்க இருக்கும் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருவரும் இடம்பெற்றுள்ளனர். வரும் 18ம் தேதி இந்திய அணி, ஹாங்காங்கையும் அதற்கு மறுநாளே பாகிஸ்தானையும் எதிர்கொள்கிறது. 

இந்த தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்ற இந்திய அணி, ஓராண்டுக்கு பிறகு அந்த அணியுடன் மோத உள்ளதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. லீக்கிற்கு அடுத்த சுற்றில் இந்திய அணி, இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகளுடனும் மோத வேண்டியிருக்கும். 

இந்நிலையில் ஆசிய கோப்பை தொடர் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், குல்தீப் மற்றும் சாஹல் கடந்த ஓராண்டாக வெற்றிகரமான ஸ்பின்னர்களாக திகழ்ந்துவருகின்றனர். ஆசிய கோப்பை தொடரில் துணைக்கண்ட பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீசுவது அவர்களுக்கு கடினம். ஏனென்றால் மற்ற வெளிநாட்டு பேட்ஸ்மேன்களை விட பாகிஸ்தான், இலங்கை, வங்கதேச வீரர்கள் ஸ்பின் பவுலிங்கை திறமையாக ஆடக்கூடியவர்கள். ஏனென்றால் அவர்கள் சிறு வயதிலிருந்தே ஸ்பின் பவுலிங்கை ஆடிவருபவர்கள். ஆனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஆடுகளங்கள் சீராக இருக்கும். அதனால் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்காது என்பதால் ஸ்பின் பவுலர்கள்தான் முக்கிய பங்காற்ற வேண்டும். அந்த வகையில், ஆசிய கோப்பை தொடர் சாஹல் மற்றும் குல்தீப்பிற்கு சவாலானதாக இருக்கும் என சேவாக் தெரிவித்துள்ளார். 
 

click me!