தொடரை முழுமையாக கைப்பற்றி தென் ஆப்பிரிக்கா வெற்றி…

Asianet News Tamil  
Published : Jan 16, 2017, 01:20 PM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
தொடரை முழுமையாக கைப்பற்றி தென் ஆப்பிரிக்கா வெற்றி…

சுருக்கம்

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3-ஆவது, இறுதி டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 118 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்வியடைந்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரையும் அந்த அணி முழுமையாக இழந்தது.

இந்த இரு அணிகளுக்கு இடையிலான இறுதி டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்கில் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 423 ஓட்டங்கள் எடுத்தது. இதில் டுமினி 155 ஓட்டங்களும், ஆம்லா 134 ஓட்டங்கள் எடுத்தார்.

அடுத்து முதல் இன்னிங்ûஸ தொடங்கிய இலங்கை அணி வீரர்கள் தென்னாப்பிரிக்க பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் 131 ஓட்டங்களுக்கு அந்த அணி சுருண்டது. தொடர்ந்து பாலோ ஆன் பெற்று 2-ஆவது இன்னிங்ஸ் இலங்கை அணி தொடர்ந்தது.

இந்த இன்னிங்ஸிலும் இலங்கை அணி வீரர்களால் ஓரளவுக்கு மேல் தாக்குப் பிடித்து விளையாட முடியவில்லை. 177 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் ஆட்டம் 3-ஆவது நாளிலேயே முடிவுக்கு வந்தது.

ஒரு இன்னிங்ஸ் மற்றும் 118 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.

சதமடித்த டுமினி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

ஏற்கெனவே நடைபெற்ற இரு டெஸ்ட் போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்ற நிலையில் இப்போது 3-ஆவது டெஸ்ட் போட்டியிலும் அந்த அணி அபாரமாக வெற்றி பெற்று தொடரையும் முழுமையாகக் கைப்பற்றியது.

இத்தொடரின் நாயகனாக தென்னாப்பிரிக்க தொடக்க வீரர் எல்கர் அறிவிக்கப்பட்டார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

2 நாளில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட் போட்டி.. ஒரே நாளில் 20 விக்கெட்.. மெல்போர்ன் பிட்ச் கியூரேட்டர் விளக்கம்!
இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் வி.வி.எஸ் லட்சுமணன்?.. பிசிசிஐ சொன்ன முக்கிய அப்டேட்!