
தில்லியில் நடைபெற்ற 2-ஆவது பிரீமியர் பாட்மிண்டன் லீக் போட்டியில் பி.வி.சிந்து தலைமையிலான சென்னை ஸ்மாஷர்ஸ் அணி, 4-3 என்ற கணக்கில் மும்பை ராக்கெட்ஸ் அணியை வென்று முதல் முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
பிரீமியர் பாட்மிண்டன் லீக் போட்டி கடந்த 1-ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றன.
இதில் சென்னை ஸ்மாஷர்ஸ், ஹைதராபாத் ஹண்டர்ஸ், பெங்களூரு பிளாஸ்டர்ஸ், டெல்லி ஏஸர்ஸ், லக்னெü வாரியர்ஸ், மும்பை ராக்கெட்ஸ் ஆகிய 6 அணிகள் பங்கேற்றன.
சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள வீரர், வீராங்கனைகள் 60 பேர் இப்போட்டியில் பங்கேற்றனர். இதில் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
இதில் சென்னை, மும்பை அணிகள் இறுதிச் சுற்றுக்கு முன்னேறின. தில்லியில் உள்ள ஸ்ரீ போர்ட் மைதானத்தில் சனிக்கிழமையன்று இறுதிப் போட்டி நடைபெற்றது.
சென்னை அணி 4-3 என்ற கணக்கில் மும்பை அணியை வென்று முதல் முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
மும்பை அணி தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இரண்டாமிடம் பிடித்தது.
இறுதிச் சுற்றில் பி.வி. சிந்து, தரவரிசையில் 3-ஆவது இடத்தில் உள்ள சீன வீராங்கனை சங் ஜி ஹியூனை 11-8, 11-8 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.