
அமெரிக்காவின் மியாமி நகரில் நடந்த எப்டிஎக்ஸ் கிரிப்டோ கோப்பை செஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சனை தோற்கடித்தார் இந்திய வீரர் ஆர். பிரக்ஞானந்தா.
கார்ல்சனை 4-2 என்ற கணக்கில் இறுதிச்சுற்றில் பிரக்ஞானந்தா வீழ்த்தியும் அவரால், தங்கப் பதக்கத்தை பெற முடியவில்லை. 2வது இடம் மட்டுமே பிரக்ஞானந்தாவுக்கு கிடைத்தது.
ஃபார்மில் இல்லைனாலும் கோலி செம கெத்துதான்..! உஷார்.. பாகிஸ்தானை எச்சரிக்கும் யாசிர் ஷா
மொத்தப் புள்ளிகள் அடிப்படையில் கார்ல்சன் 16 புள்ளிகளுடன்முதலிடத்திலும், பிரக்ஞானந்தா 15 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் இருந்தார். இதனால் கார்ல்சனை வீழ்த்தியும் பிரக்ஞானந்தாவால் தங்கத்தை வெல்ல முடியவில்லை. 3-வது இடத்தை அலிரேசா பிரோசா பெற்றார்.
போட்டிக்குப்பின் கார்ல்சன் அளித்த பேட்டியில் “ என்னுடை ஆட்டம் மிக மோசமாக இருந்தது. இருப்பினம் இன்று நான் எனக்குரிய முடிவுகளை பெறத்தகுதியுடையவனாக மாறிவிட்டேன்” எனத் தெரிவித்தார்
3-வது இடம் பிடித்த அலிரேசா பிரோசா, லீக் ஆட்டத்தில் பிரக்ஞானந்தாவிடம் தோல்வி அடைந்ததால், பிரக்ஞானந்தாவுக்கு இணையாக புள்ளிகள் பெற்றும் 3வது இடமே கிடைத்தது.
ஷாஹீன் அஃப்ரிடி காயம் அடையல; அடைய வச்சுட்டீங்க..! பாக்., முன்னாள் வீரர் விளாசல்
பிரக்ஞானந்தா, கார்ல்சன் மோதிய இரு ஆட்டங்களும்முதலில் டையில் முடிந்தன. அதன்பின் 3-வது 4-வது சுற்றில் பிரக்ஞானந்தா வென்றார். இதுவரை கார்ல்சனை 2 முறை வீழ்த்திய பிரக்ஞானந்தா 3வதுமுறையாக தோற்கடித்துள்ளார்.
சென்னையில் சமீபத்தில் நடந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவின் பி பிரிவில் இடம்பெற்று வெண்கலப் பதக்கம் வெல்ல பிரக்ஞானந்தா முக்கியக் காரணமாக இருந்தார்.
பிரக்ஞானந்தா தனது முதல் சுற்றில் உலகின் 4-வது இடத்தில் உள்ள பிரோஜாவையும், அதன்பின் அனிஷ் கிரி, லெவோன் அரோனியனை தோற்கடித்தார்.
நீரஜ் சோப்ராவின் வெறித்தனமான பயிற்சி..! வைரல் வீடியோ
பிரக்ஞானந்தாவின் பயிற்சியாளர் ஆர்.பி.ரமேஷ் ட்விட்டரில் பதிவிட்ட வாழ்த்துச் செய்தியில் “ இறுதிச்சுற்றில் அருமையான முடிவு. மாக்னஸை தோற்கடித்தார் பிரக்ஞானந்தா. முக்கியமான கட்டங்களில் தடுப்பாட்டத்தை பிரக்ஞானந்தா வெளிப்படுத்தினார்.சிறந்த தொடக்கத்தை வெளிபடுத்தி வெற்றிகளைக் குவித்தார். இருப்பினும் சில தவறான முடிவுகள் இருந்தது. ஒட்டுமொத்தமாக பிரக்ஞானந்த வெற்றி மனநிறைவாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.