வெறித்தனமா இலக்கை விரட்டி நூழிலையில் தோல்வியடைந்த நெதர்லாந்து! ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தொடரை வென்ற பாகிஸ்தான்

By karthikeyan VFirst Published Aug 21, 2022, 10:52 PM IST
Highlights

 நெதர்லாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 9 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நெதர்லாந்தை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தொடரை வென்றது பாகிஸ்தான் அணி.
 

பாகிஸ்தான் அணி நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் 2 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி போட்டி இன்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

பாகிஸ்தான் அணி:

ஃபகர் ஜமான், அப்துல்லா ஷாஃபிக், பாபர் அசாம் (கேப்டன்), அகா சல்மான், குஷ்தில் ஷா, முகமது ஹாரிஸ் (விக்கெட் கீப்பர்), முகமது நவாஸ், முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா, ஷாநவாஸ் தஹானி, ஜாகித் மஹ்மூத்.

இதையும் படிங்க - Asia Cup 2022: இந்திய அணியை நக்கலடித்த வக்கார் யூனிஸுக்கு தரமான பதிலடி கொடுத்து மூக்கை உடைத்த இர்ஃபான் பதான்

முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியில் பாபர் அசாமை தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. தொடக்க வீரர்கள் அப்துல்லா ஷாஃபிக் (2) மற்றும் ஃபகர் ஜமான்(26) ஆகிய இருவருமே ஏமாற்றமளித்தனர். 3ம் வரிசையில் இறங்கிய பாபர் அசாம் ஒருமுனையில் நிலைத்து நிற்க, மறுமுனையில் அகா சல்மான்(24), குஷ்தில் ஷா(2), முகமது ஹாரிஸ்(4) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஒருமுனையில் நிலைத்து ஆடிய கேப்டன் பாபர் அசாம் 91 ரன்களை குவித்தார். 9 ரன்னில் சதத்தை தவறவிட்டு 91 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் பாபர் அசாம். பின்வரிசையில் முகமது நவாஸ் 27 ரன்கள் அடித்தார். இதையடுத்து 49.4 ஓவரில் 206 ரன்களுக்கு ஆல் அவுட்டான பாகிஸ்தான் அணி, 207ரன்கள் என்ற எளிய இலக்கை நெதர்லாந்துக்கு நிர்ணயித்தது.

இதையும் படிங்க - IND vs PAK: ஃபார்மில் இல்லைனாலும் கோலி செம கெத்துதான்..! உஷார்.. பாகிஸ்தானை எச்சரிக்கும் யாசிர் ஷா

207 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய நெதர்லாந்து அணியில் தொடக்க வீரர் விக்ரமஜித் சிங் மற்றும் மிடில் ஆர்டரில் டாம் கூப்பர் ஆகிய இருவரும் சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தனர். ஆனால் அவர்கள் இருவரில் ஒருவர் கடைசி வரை நின்று போட்டியை முடித்து கொடுக்கவில்லை.விக்ரமஜித் சிங் 50 ரன்னிலும், கூப்பர்  62 ரன்னிலும் ஆட்டமிழக்க, மற்ற வீரர்களை எளிதாக வீழ்த்தியது பாகிஸ்தான் அணி.

நெதர்லாந்து அணியில் விக்ரமஜித், கூப்பரின் சிறப்பான பேட்டிங்கால் அந்த அணி இலக்கை நெருங்கி வந்தது. ஆனால் மற்ற வீரர்கள் சரியாக ஆடாததால் 197 ரன்களுக்கு ஆல் அவுட்டான நெதர்லாந்து அணி 9 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, 3-0 என நெதர்லாந்தை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தொடரை வென்றது.
 

click me!